செய்திகள் :

Fahadh Faasil: "எனக்குப் பிடித்த டாப் 5 படங்கள் இவைதான்" - பகத் பாசில் சொன்ன சூப்பர் லிஸ்ட்

post image

இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்கத்தில் பஹத் பாசில், வடிவேலு இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் 'மாரீசன்'. ரோடு ட்ராவலில் நடக்கும் மெல்லிய மனதிற்கு இலகுவான இத்திரைப்படம் இந்த வாரம் ஜூலை 25ம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.

நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலை வரைக்கும் வந்து, அங்கிருந்து கோயம்புத்தூருக்கு பஹத், வடிவேலு இருவரும் பைக்கில் பயணமாவதுதான் கதை. திருடனாக இருக்கும் பகத், வடிவேலுவிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்க அவருடனே செல்ல நேரிடுகிறது.

அடிக்கடி எல்லாவற்றையும் மறந்துவிடும் வடிவேலுவுடன் பஹத் மாட்டிக்கொண்டு எப்படியெல்லாம் தவிக்கிறார். இருவருக்குமிடையே என்னவெல்லாம் நடக்கிறது. இந்தப் பயணம் இருவரின் வாழ்வை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதுதான் இதன் கதைக்களம்.

ஃபகத் ஃபாசில்

பஹத் பாசிலுக்குப் பிடித்த டாப் 5 படங்கள்

இதன் வெளியீட்டையொட்டி 'The Hollywood Reporter India' சேனலுக்குப் பேட்டியளித்திருக்கும் பஹத் பாசில், தான் பார்த்த முதல் தமிழ்த் திரைப்படம் ரஜினியின் 'பாட்ஷா' என்று சிலாகித்துப் பேசியிருந்தார்.

இதையடுத்து தனக்குப் பிடித்த டாப் 5 படங்களைப் பட்டிலிட்டிருக்கிறார்.

1. குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையையும், காதலையும் சொல்லும் அமிதாப் பச்சனின் 'MILI'.

2. ஶ்ரீதேவி - ரஜினியின் காதல், பெண்ணால் திருந்தி வாழ நினைக்கும் ஜானி, நன்றாக வாழ்ந்து பெண்ணால் கெட்டுப்போன வித்யாசாகர். இவர்களின் வாழ்க்கை, ராஜாவின் இசை என மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி, ஶ்ரீதேவி நடித்த 'ஜானி'.

3. சிறை செல்லும் ஜீவனின் வாழ்க்கைக் கதை சொல்லும் மோகன் லாலின் 'Season'.

4. சிறுவனின் பாலுணர்வு, காதல், ஏக்கம், புரிதல் பற்றியும், நகரத்தில் அனாதையாக்கப்பட்ட அழகியப் பெண்ணின் வாழ்க்கைப் பற்றியும் சொல்லும் மோனிகா பெலூச்சி நடித்த 'Malèna'.

5. மைக்கேல் ராட்ஃபோர்ட் இயக்கத்தில் புகழ்பெற்ற ரஷ்யக் கவிஞர் நெருதாவின் (Pablo Neruda) கவிதைகள், அரசியல் மற்றும் அழகான காதல் காதல் சொல்லும் 'Il Positino (The Postman)'.

இவைதாம் நடிகர் பஹத் பாசிலுக்குப் பிடித்த டாப் 5 திரைப்படங்களாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

``ராஜ்ய சபாவில் உங்களுக்கே உரிய குரலில்..'' - எம்.பி கமல்ஹாசனுக்கு மகள் ஸ்ருதியின் அன்பு வாழ்த்து

மதுரையில் 2018 பிப்ரவரியில் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய திரைக் கலைஞர் கமல்ஹாசன், தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களான முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத அரசியல... மேலும் பார்க்க

மாரீசன் விமர்சனம்: ஃபார்மல் டிரஸ் வடிவேலு, பக்கா திருடர் பகத் பாசில்; இந்தப் பயணம் எப்படி?

சிறுசிறு திருட்டுகள் செய்யும் திருடரான தயாளன் (பகத் பாசில்), பாளையங்கோட்டை மத்தியச் சிறையிலிருந்து விடுதலையாகிறார். மீண்டும் திருடுவதற்காக நாகர்கோவிலுள்ள பூட்டிய வீடு ஒன்றில் நுழைய, அங்கே ஓர் அறையில் ... மேலும் பார்க்க

D54: 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களைச் சந்திக்கும் தனுஷ்; பிறந்தநாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்!

மகிழ்ச்சியில் பூரிக்கின்றனர் தனுஷின் ரசிகர்கள். வருகிற 28ம் தேதி தனுஷின் பிறந்த நாள் வருவதால், பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ரெடியாகி வருகின்றனர்.தனுஷின் வளர்ச்சியில் அவரது ரசிகர்களின் பங்கு முக்கியமானது... மேலும் பார்க்க