கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை: கைதானவரை அடையாளம் காட்டினாரா சிறுமி?
D54: 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களைச் சந்திக்கும் தனுஷ்; பிறந்தநாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்!
மகிழ்ச்சியில் பூரிக்கின்றனர் தனுஷின் ரசிகர்கள். வருகிற 28ம் தேதி தனுஷின் பிறந்த நாள் வருவதால், பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ரெடியாகி வருகின்றனர்.
தனுஷின் வளர்ச்சியில் அவரது ரசிகர்களின் பங்கு முக்கியமானது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ரசிகர்களை அவ்வப்போது சந்தித்த தனுஷ், அதன் பின் டைரக்ஷனிலும் தொடர்ந்து பிஸியாகிவிட்டதால் ரசிகர்களிடம் பேசுவதற்கான போதுமான நேரம் கிடைக்காமலிருந்தார்.
இந்நிலையில் இனி ஒவ்வொரு ஞாயிறும் ரசிகர்களைச் சந்திக்க உள்ளார். வரும் 27ம் தேதியும் அப்படிச் சந்திக்கிறார். முதற்கட்டமாக சென்னையில் உள்ள ரசிகர்களில் 500 பேருடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

இன்னொரு ட்ரீட் ஆக 'இட்லிக் கடை'யில் இருந்து கொடுக்கிறார். 'ராயன்' படத்திற்குப் பின் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லிக் கடை' அக்டோபரில் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து தனுஷ் இந்தியில் 'தேரே இஷ்க் மெய்ன்' நடித்து முடித்திருக்கிறார். அதனை அடுத்து இப்போது 'போர்த்தொழில்' இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே தனுஷின் பிறந்தநாள் ஸ்பெஷலாக 'இட்லிக் கடை'யில் இருந்து ஒரு சிங்கிள் வெளியாகிறது. 'வாத்தி' படத்தில் 'ஒரு தல காதல தந்தேன்.. ' கூட்டணியான தனுஷ், ஸ்வேதா மோகன் பாடும் பாடல் ஒன்று 27ம் வெளியாகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் பாடலை தனுஷ் எழுதியிருக்கிறார்.
நாளை 'புதுப்பேட்டை' படம் ரீரிலீஸ் ஆகிறது. கடந்த 2006-ம் ஆண்டு வெளியான இப்படம், ரீமாஸ்டரிங் செய்துள்ளனர். 4கே தொழில்நுட்பத்துடன் புதுப்பொலிவு செய்துள்ளனர். தமிழ்சினிமாவில் கேங்ஸ்டர் படங்களை புதுப்பேட்டைக்கு முன் - பின் என வகைப்படுத்தும் அளவிற்கு இப்படத்தின் தாக்கம் உள்ளது.
அதற்கு முன் கேங்ஸ்டர் படங்கள் பெரும்பாலும் ஆக்ஷன் மற்றும் வன்முறையை மையப்படுத்தியிருந்தது. ஆனால் இந்தப் படம் கதாபாத்திரங்களின் உளவியல் ஆழத்தையும், சமூக அமைப்பின் தாக்கத்தையும் எடுத்துக்காட்டியது. நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பிறந்தநாளில் 'தேரே இஷ்க் மெய்ன்' படத்திலிருந்தும் அப்டேட் ஒன்று வருகிறது. இப்போது 'போர்த்தொழில்' விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தின் 'தனுஷ் 54'ன் ஷூட்டிங் சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது.
பரபரப்பான சண்டைக்காட்சிகளுக்கான ஒத்திகைகள் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். இந்தப் படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், ஜெயராம், கே.எஸ்.ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு எனப் பலரும் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
மமிதா பைஜூவின் போர்ஷன் இனிதான் எடுக்க உள்ளனர். 'வீரதீர சூரன்' தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துவருகிறார். வரும் 28ம் தேதி சென்னையில் பிறந்தநாளைக் கொண்டாடும் தனுஷ், அதனைத் தொடர்ந்து இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்கிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...