காஞ்சிபுரம்: யார் திவ்ய பிரபந்தம் பாடுவது? மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை!
Game Changer : `எனக்கு கில்லி, தூள் படங்கள் பிடிக்கும்; அதுமாதிரி ஒரு படம்.!’ - ஷங்கர் எக்ஸ்க்ளூஸிவ்
இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வெளிவருகிறது. இந்த நிலையில் இயக்குநர் சங்கரை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்..
`கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி தொடங்கியது? அதனுடைய தொடக்க புள்ளி என்ன?’
``கொரோனா காலகட்டத்தில் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 ஆகிய இரண்டு படங்களையும் ஒரு கருவை சுமந்து கொண்டு இருப்பது போல சுமந்து கொண்டிருந்தேன். அப்போது அந்த கொரோனா பீரியடில் வேள்பாரி கதை ரொம்ப பிடித்ததால் அதையும் திரைக்கதை எழுதி சுமக்க ஆரம்பித்து விட்டேன். இந்த மூன்று ஸ்கிரீன்பிளே எழுதி அதையும் முடித்து இருந்தேன். அப்போது நிறைய தமிழ் தயாரிப்பாளர்கள், தெலுங்கு தயாரிப்பாளர்கள், தில் ராஜு சார், தமிழ் ஹீரோஸ் மற்றும் தெலுங்கு ஹீரோஸ் எல்லாருமே ஒரு படம் பண்ணலாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது என்னிடம் இது இல்லாமல் ஒரு இரண்டு கதை இருந்தது. ஒரு சயின்ஸ் பிக்சன் திரைப்பட கதை இருந்தது. அதற்கு ஒரு நியூ ஃபேஸ் தான் வேண்டும். ஆனால் பட்ஜெட் மிகப்பெரியதாக இருக்கும் ஹாலிவுட் பட கான்செப்டில் அது இருக்கும். அதையும் இப்போது எடுக்க முடியாது.
இன்னொன்று ஸ்பை த்ரில்லர் அதையும் வெளிநாட்டில் தான் ஷுட்டிங் செய்ய வேண்டும். அதையும் எடுக்க முடியாது. பிராக்டிக்கலாக நம்மிடம் எதிர்பார்க்கக் கூடிய ஒரு படமும் கொடுக்க வேண்டும், அன்றைய கொரோனா காலகட்டத்தில் மெல்ல ஆரம்பித்து போக போக கிரௌடு சேர்த்து செய்கின்ற பிளானில் இருந்தேன். ஏற்கனவே இரண்டு ஸ்கிரிப்ட் சுமந்து கொண்டு இருந்தேன், அதன் பிறகு இரண்டு ஸ்கிரிப்ட் பிராக்டிகலா வராத போது, டோட்டலி ஐ அம் ஃபுல்.
அப்படி இருக்கும் பொழுது கொரோனா காலகட்டத்தில் இயக்குனர்கள் அனைவரும் ஜூம் மீட்டிங்கில் பேசிக் கொண்டிருப்போம், அப்போது கார்த்திக் சுப்புராஜ் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. நம் நண்பர்களிடமிருந்து ஏதோ ஒரு கதை ஏற்புடையதா இருந்தா செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது, அவர், `நான் ஒரு கதை வைத்திருக்கிறேன் சார், அந்த கதை உங்களுடைய இன்ஸ்பிரேஷனில் எழுதினது தான்’ என சொன்னார். எனக்கு பண்றதுக்கு இப்போது கொஞ்சம் கஷ்டம் உங்களுக்கு பிடித்தால் நீங்கள் செய்யுங்கள் என்று சொன்னார்.
நம்ம இன்ஸ்பிரேஷனில் அவர் சொன்னதால், ஏதோ ஒரு சிங்க் ஆகி இருக்கும் என்று நினைக்கிறேன். அதை செய்யலாம் என்று டிசைட் பண்ணது தான் கார்த்திக் சுப்புராஜ் கதை. அவர் ஃபுல் ஸ்டோரியை என்னிடம் சொன்னார், அதை ரெக்கார்ட் செய்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, நிறைய விஷயங்களை சேர்த்து ஸ்கிரீன் பிளேவாக மாற்றி இப்போது அந்த திரைப்படம் வரப்போகிறது.
எனக்கு கில்லி, தூள், தில் மற்றும் தெலுங்கில் ஒக்கடு, போக்கிரி அந்தப் படங்களும் பிடிக்கும். பரபரவென்று ஒரு என்டர்டைன்மென்டாக அந்த திரைப்படம் இருக்கும். நாமும் அந்த மாதிரி ஒரு திரைப்படம் பண்ணலாம் என்று ஒரு ஐடியா இருந்தது. இந்த ஸ்கிரிப்ட் அதற்கு ஒரு மேட்ச் ஆக இருந்தது. பரபரப்பான ஒரு நல்ல மாஸ் மசாலா பிலிம் அந்த மாதிரி ஒரு படமாக இது இருக்கிறது. நீங்கள் தான் அந்த திரைப்படத்தை பார்த்து சொல்ல வேண்டும்.
சு. வெங்கடேசன் அவர்களுடன் வேள்பாரி சமயத்தில் பழகும் போது அவரிடம் கேட்டேன், `நீங்க சரித்திரம் கதைகள் மட்டும் தான் எழுதுவீங்களா... நீங்க திரைப்படத்தில் பணியாற்றும் பொழுது நார்மலாக சோசியல் தீம் கதைகள் எழுதுவீர்களா?’ என்று கேட்ட போது, தாராளமா பண்ணலாம் சார் எல்லா கதைகளும் செய்யலாம் சார் என்று சொன்னார். அவர் இந்தத் திரைப்படத்தின் கதை விவாதங்களில் கலந்து கொண்டது நல்ல விஷயமாக இருந்தது. இந்த கதை வேற ஒரு ஷேப் எடுத்ததற்கு அவருடைய கான்ட்ரிபியூஷன்ஸ் நிறைய இருந்தது. தில்ராஜு ரொம்ப நாளாவே நம்முடன் படம் செய்ய வேண்டும் என்று ஆர்வமுடன் இருந்தார் அவரும் இதில் இணைந்தார். ராம்சரண் உள்ளே வந்தார். எல்லாமே சரியாக திங்க்ஸ் ஃபாலின் பிளேஸ் என்று சொல்வார்கள் இல்லையா அதுபோல அமைந்தது. ”
``ராம் சரண் தான் இதில் நடிக்க வேண்டும் என்ற ஐடியா எப்படி வந்தது?”
``என்னுடைய கதைகள் எல்லாமே எல்லா மாஸ் ஹீரோஸ்கள் எல்லா நடிகர்களுக்கும் பொருந்தக்கூடிய கதையாக தான் இருக்கும். என்னுடைய எந்த படத்தையும் எந்த ஹீரோவும் பண்ணலாம். கரெக்டா யார் வருகிறார்களோ சிங்க் ஆகிறார்களோ அவர்களை வைத்து தான் பண்ணுவேன். ஒரு சில கதைகள் இவர்தான் செய்ய வேண்டும் என்று நாம் நினைத்து கதை எழுதுவோம். ஆனால் இந்த கதை யார் யார் வேண்டுமானாலும் பண்ணலாம் என்று இருக்கும் பொழுது, அவர் மாஸ் ஹீரோ எஸ்டாப்ளிஷ் ஹீரோ கதாநாயகனுக்கு உண்டான எல்லாவித பர்ஃபார்மன்ஸ் அவருக்கு இருக்கிறது. எனவே ராஜு நான் எல்லாம் ஒரு கூட்டாக ராம்சரண் வைத்து படம் எடுக்கலாம் என்று ஒரு டிசிஷன் எடுத்தோம்.”
`நாயக் திரைப்படத்தின் ரிசல்ட் தான் உங்களை மத்த மொழிகளில் ஃபோக்கஸ் செய்யாமல், தமிழிலேயே போக்கஸ் செய்யலாம் என்று யோசிக்க வைத்ததா?’
``அப்படியெல்லாம் இல்லைங்க. பாய்ஸ் படத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், ரசூல் பூக்குட்டியில் இருந்து நிறைய பேர், `உங்கள் படங்களிலேயே மிகவும் பிடித்த படம் பாய்ஸ் தான். இட்ஸ் குளோஸ் டு மை ஹார்ட்’ என்று சொல்கிறார்கள். இவ்வளவு வருடம் கழித்து ஃபிலிம் மேக்கர்ஸ் பல பேர் டாப் டெக்னீசியன் எல்லாருமே அந்த படத்தை பாராட்டுகிறார்கள். ஒரு படத்திற்கு எவ்வளவு விஷயங்கள் கூடி வர வேண்டியதாக இருக்கிறது. அன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலை, அன்றைக்கு இருக்கக்கூடிய மக்கள் மனநிலை, அன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் அன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் நிலவரம், அன்றைக்கு சினிமாவுக்கு இருக்கக்கூடிய சிக்கல் இது எல்லாம் இருக்கு.
நாயக் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆனது, செப்டம்பர் 11ஆம் தேதி வேர்ல்ட் ட்ரேட் சென்டர் மீது அட்டாக் நடந்தது. படத்தை அதுவும் பாதிக்கிறது. வெளிநாடுகளில் எலக்ட்ரானிக் மீடியா கொஞ்சம் மார்க்கெட் டவுன் ஆகிறது. தியேட்டரில் ரிலீஸ் ஆகும் பொழுது சில மாநிலங்களில் ரொம்ப பிரமாதமாக இருக்கிறது. ஆனால் டெலிவிஷனில் வெளிவந்த பிறகு, அதைப் பார்க்காத ஆளே இல்லை. பாராட்டாத ஆளே கிடையாது. சில படைப்புகளுக்கு கொஞ்சம் காலம் தாண்டி ரிசல்ட் வருகிறது. அனில் கபூர் சொல்கிறார் டெலிவிஷன் உடைய ஷோலே சார் இது. அத்தனை முறை டெலிகாஸ்ட் செய்து ட்ரெண்டிங் ஆனது.
எனக்கு இந்தி படங்கள் ஜென்டில்மேன் திரைப்படத்திலிருந்து வந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அது செட் ஆக வேண்டும். ஆக்டர், ப்ரோடுயூசர், டைரக்டர் மூன்று பேரும் கதை விஷயமாக மற்றும் தேதிகள் இதெல்லாம் செட் ஆக வேண்டும். எனக்கு செட் ஆகவில்லை. இப்போ கூட ரன்வீர் கூட பண்றதா பிளான் செய்தோம். இப்போது அதைவிட பெருசா பண்ணனும் அப்படின்ற ஒரு எண்ணம் போயிட்டு இருக்கிறது. மொழிகள் எல்லாம் ஒன்றும் இல்லை, எந்த மொழியாய் இருந்தாலும் பண்ணுவேன். ஆனால் அது சரியாக வர வேண்டும். ஆக்டர், ப்ரோடுயூசர், டைரக்டர் சிங்க் ஆக வேண்டும். அப்படி சரியாக வந்தால், இந்தி உள்ளிட்ட எந்த மொழியாக இருந்தாலும் பண்ணலாம்.”
இது தவிர, மகள் அதிதி, ரஜினிகாந்த் பயோபிக், வேள்பாரி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார் இயக்குநர் ஷங்கள்...
முழுமையான வீடியோவுக்கு...