செய்திகள் :

Gangers: `இவர் மேல எனக்கு ஒரே ஒரு வருத்தம் இருந்தது..' - வடிவேலு குறித்து சுந்தர்.சி

post image

சுந்தர்.சி இயக்கி நடித்திருக்கும் படம் 'கேங்கர்ஸ்'. இதில் சுந்தர்.சி உடன் வடிவேலு, கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

ஏப்ரல் 24-ம் தேதி இத்திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வடிவேலு குறித்து பேசிய சுந்தர்.சி, "நானும், வடிவேல் சாரும் இணைந்து கிட்டதட்ட 20 வருடங்களாகப் பணியாற்றி வருகிறோம்.

கேங்கர்ஸ்
கேங்கர்ஸ்

2003-ல் வடிவேல் சாருடன் எனது பயணத்தைத் தொடங்கினேன். ஒரு நடிகர் இப்படி நடிக்க முடியுமா? என்று இன்னும் அவரைப் பார்த்து வியந்துக்கொண்டிருக்கிறேன். படத்தில் ஒரு சாதாரணக் காட்சியாக இருந்தால் கூட அதற்கு அவர் கொடுக்கும் எக்ஸ்ப்ரக்ஷன் அற்புதமாக இருக்கும்.

நடிப்பில் லெஜண்ட் என்று சொன்னால் அது வடிவேல் சார்தான். ஒரு காட்சிக்கு நான் 10 சதவிகிதம் யோசித்தால் போதும் மீதி 90 சதவிகிதம் அவரே நடிப்பில் படத்தை சிறப்பாக்கி விடுவார்.

அதனால் எல்லா நடிகர்களுக்கும் இவர் மாஸ்டர் க்ளாஸ் என்று சொல்லலாம். ஒரு மனிதன் இத்தனை வருடங்களாக சிரிக்க வைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

அவர் 100 வருஷம் எல்லோரையும் சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தணும். இந்தப் படத்தில் இவருடன் பணியாற்றியப்போது இயக்குநராக இல்லை. ஒரு ரசிகனாக இருந்து இவரை ரசித்துக்கொண்டு இருந்தேன்.

சுந்தர்.சி
சுந்தர்.சி

வடிவேல் சார் மீது எனக்கு ஒரே ஒரு வருத்தம் இருந்தது. அது அவர் இடையில் கொஞ்சம் நடிக்காமல் இருந்ததுதான். அந்த கேப்பில் அவர் நடித்திருந்தால் எத்தனை படங்களை நாம் ரசித்திருந்திருப்போம்.

இனிமேல் அவரைப் பார்த்து சிங்கம் களத்தில் இறங்கிவிட்டது என எல்லோரும் சொல்ல வேண்டும்" என்று வடிவேலு குறித்து சுந்தர்.சி நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Idly Kadai: தனுஷின் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தீடீர் தீ விபத்து; பின்னணி என்ன?

தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் முன்பு ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஆனால், படத்தின் 15 சதவ... மேலும் பார்க்க

Bobby Simha: சென்னையில் கார் விபத்து; 6 வாகனங்கள் சேதம்; போதையில் இருந்த ஓட்டுநர் கைது!

தேசிய விருது பெற்ற நடிகரான பாபி சிம்ஹாவின் கார் சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தில் 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், பெண் உள்... மேலும் பார்க்க

Bombay: `பாம்பே படம் இன்று வெளியானால்... நாட்டின் சகிப்புத்தன்மை?’ - ராஜீவ் மேனன் ஓப்பன் டாக்

மணிரத்னத்தின் 'பாம்பே' படம் இன்று திரையரங்குகளில் வெளியானால் பெரும் சவால்களை சந்திக்கும். அந்தளவு இந்தியா சகிப்புத் தன்மையில்லாத நாடாக மாறிவருகிறது என பாம்பே படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தெரிவி... மேலும் பார்க்க

XEV 9E: "இந்த காருக்கான சவுண்டை நாங்கள் உருவாக்கினோம்" - ரஹ்மானின் இன்ஸ்டா பதிவு வைரலாக காரணம் என்ன?

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய EV-BE6, XEV 9E கார்களை அறிமுகப்படுத்தியது. இந்த BE6 மற்றும் XEV 9E-யின் ஒலி வடிவமைப்பில் ஆஸ்கர் நாயகன் AR ரஹ்மானும் பணியாற்றியிருக்கிறார். இது தொடர்பாக அவர் முன்பு வெளியி... மேலும் பார்க்க