புதுச்சேரி: இந்திரா – ராஜீவ் காந்தி சதுக்கம் இடையே ரூ.436 கோடியில் மேம்பாலம்! - ...
Gaza: இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்; "இது எளிதானது அல்ல" - ட்ரம்பைப் பாராட்டும் ஜோ பைடன்
இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் எகிப்தில் கையெழுத்தானது.
இதனைப் பாராட்டி அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

பதிவு...
"நினைத்துப் பார்க்க முடியாத நரகத்தை அனுபவித்து வந்த 20 பணயக் கைதிகள் தங்கள் குடும்பத்தோடு இணைவதற்கும்... அளவிட முடியாத இழப்புகளைச் சந்தித்து வந்த காசா மக்கள் கடைசியாக அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும்... கிடைத்த இந்த நாளுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்... எனக்கு நிம்மதியாகவும் இருக்கிறது.
இதற்கான பாதை எளிதானது அல்ல. பணயக் கைதிகளை அவர்களது வீட்டிற்குக் கொண்டு சேர்ப்பதற்கும், பாலஸ்தீன மக்களுக்கு நிம்மதியைத் தரவும், போரை நிறுத்தவும் எனது நிர்வாகம் தொடர்ந்து உழைத்து வந்தது.
பாராட்டுகள்!
புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கொண்டுவந்த அதிபர் ட்ரம்பிற்கும், அவரது குழுவிற்கும் என்னுடைய பாராட்டுகள். அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் உதவியோடு தற்போது மத்திய கிழக்கு அமைதிப் பாதைக்கு வந்துள்ளது.
இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்குச் சம அளவிலான அமைதி, கண்ணியம் மற்றும் பாதுகாப்புடன் நீடித்த எதிர்காலம் அமையும் என்று நான் நம்புகிறேன்" என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
I am deeply grateful and relieved that this day has come – for the last living 20 hostages who have been through unimaginable hell and are finally reunited with their families and loved ones, and for the civilians in Gaza who have experienced immeasurable loss and will finally…
— Joe Biden (@JoeBiden) October 13, 2025