Sri Lanka General Elections : தட்டித்தூக்கிய Anura Kumara Dissanayake - வென்ற NP...
Gold Rate: `தங்கம் விலை ரூ.57,000-த்தை தாண்டியுள்ளது!' - வரலாற்றில் இதுவே முதல் முறை!
'இப்போ தாண்டிவிடுமோ... அப்போ தாண்டிவிடுமோ' என்றிருந்த தங்கம் விலை, தற்போது பவுனுக்கு ரூ.57,000-த்தை தாண்டிவிட்டது.
இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.56,960 வரை சென்று இன்னும் ஓரிரு நாள்களில் தங்கம் விலை ரூ.57,000-த்தை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், நினைத்ததற்கு முற்றிலும் மாறாக, கடந்த வாரம் புதன்கிழமை, தங்கம் விலை கிராமுக்கு ரூ.7,030 ஆகவும், பவுனுக்கு ரூ.56,240 ஆகவும் விற்று மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்தது.
'அடுத்து தீபாவளி வருது... இதே மாதிரி குறைஞ்சுதுனா நல்லா இருக்கும்' என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயரத்தொடங்கியது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,095-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.56,760-க்கும் விற்பனை ஆனது. இன்று கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,140 ஆகவும், பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.57,120 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது. தங்கம் விலை ரூ.57,000-த்தை தாண்டுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த வாரம் தொடக்கம் முதலே, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.103-ஆக தொடர்ந்து வருகிறது.
"இன்னும் சில நாட்களில் அமெரிக்க தேர்தல் நடக்க உள்ளது, இஸ்ரேல்-ஈரான் போர், உலக நாடுகளின் பொருளாதாரம், தங்கம் மீதான அதிக முதலீடுகளை வைத்து பார்க்கும்போது, தங்கம் விலை இப்போதைக்கு குறையும் என்று சொல்லமுடியாது" என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.