Good Bad Ugly: 5-வது முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்கும் த்ரிஷா
மீண்டும் அஜித்துடன் இணைந்து நடித்திருக்கிறார் த்ரிஷா.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் `குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித்துடன் பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். த்ரிஷாவும் இப்படத்தில் நடிப்பதாக தகவல் முன்பே பேசப்பட்டது. தற்போது த்ரிஷா படத்தில் நடித்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டிருக்கிறது `மைத்ரி மூவி மேக்கர்ஸ்' தயாரிப்பு நிறுவனம். இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார்.

அஜித் நடிப்பில் இம்மாதம் `விடாமுயற்சி' திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் 10-ம் தேதி இந்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகியிருக்கிறது. அஜித்துடன் த்ரிஷா 'கிரீடம்', 'மாங்காத்தா', 'என்னை அறிந்தால்', 'விடாமுயற்சி' போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஐந்தாவது முறையாக 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
https://bit.ly/VikatanWAChannel