செய்திகள் :

Google: ``வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை செய்யுங்கள்.." - இணை நிறுவனர் செர்ஜி பிரின் சொல்வதென்ன?

post image

ஊழியர்கள் வாரத்துக்கு 60 மணி நேரம் வேலைசெய்ய வேண்டும் என்றும் வாரநாள்களில் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றும் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் தெரிவித்திருக்கிறார்.

2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ChatGPT-யால் வளர்ச்சியடைந்த AI தொழில்நுட்ப சந்தையில் பெரும் போட்டி நிலவுகிறது. அதனால் AI தொழிற்நுட்ப வளர்ச்சி உச்சியை நோக்கி வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது கூகுள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் வாரத்துக்கு மூன்று நாள்கள் நேரில் வேலை செய்ய வேண்டும் என்ற நடைமுறை செயல்பாட்டில் இருக்கிறது. இந்த நிலையில், நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின், ``செயற்கை பொது நுண்ணறிவு (AGI), ஜெமினி AI தொழில்நுட்பம் உள்ளிட்டப் பிரிவுகளில் வேலைசெய்யும் ஊழியர்கள் வாரத்துக்கு 60 மணி நேரம் வேலை செய்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

Google co-founder Sergey Brin

வார வேலை நாள்களில் அலுவலகத்தில் இருக்கும்படி நாள்களை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஊழியர்கள் கடினமாக உழைத்தால், மனித நுண்ணறிவை விஞ்சும் ஒரு மைல்கல்லான AGI ஐ அடைவதில், கூகுள் தொழில்துறையை வழிநடத்த முடியும். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வசதிகளும் எங்களிடம் உள்ளன என்று நான் நம்புகிறேன். ஆனால் நாம் நமது முயற்சிகளை டர்போ சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்.

அதற்காக வாரத்திற்கு 60 மணிநேர வேலை என்பது உற்பத்தித்திறனின் அற்புதமான இடம். 60 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்வது சோர்வை ஏற்படுத்தும். அதே நேரம் ஊழியர்கள் அதை விட குறைவான நேரம் வேலை செய்வது அல்லது குறைந்தபட்சமாக வேலை செய்வது உற்பத்தியற்றது மட்டுமல்ல, மற்ற அனைவருக்கும் மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்தும். "எனக் குறிப்பிட்டிருக்கிறார். கூகுள் இணை நிறுவனரின் இந்த அறிவிப்பு கூகுளின் தற்போதைய அலுவலக வேலை நேரக் கொள்கையை அதிகாரப்பூர்வமாக மாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Volkswagen: ``97% இறக்குமதி, $ 1.4 பில்லியன் வரி ஏய்ப்பு..'' -சுங்க வரித்துறை கிடுக்கிப்பிடி விசாரணை

இந்தியாவில் வோக்ஸ்வாகன் கார் நிறுவனம் புனே மற்றும் ஒளரங்காபாத்தில் கார்களை தயாரித்து வருகிறது. இந்த கார்கள் தயாரிக்க வோக்ஸ்வாகன் நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ஒட்டுமொத்த உதிரி பாகங்களையும் இறக்குமதி ... மேலும் பார்க்க

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2024: பிசினஸ் சாதனையாளர்கள் சொன்ன வெற்றிச் சூத்திரங்கள்..!

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருது 2024 நிகழ்வு பிப்ரவரி 7-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தா.மோ.அன்பரசன், தொழிலதிபர்கள் உள்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர... மேலும் பார்க்க

Eternal ஆக மாறிய Zomato: ``வாடிக்கையாளருடன் ஒரு உறவு வேண்டும்'' -தீபிந்தர் கோயல் சொல்லும் ஃபார்முலா!

இந்தியாவில் உணவு வர்த்தகத்தில் zomato தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. குறிப்பாக தனது பிராண்டினை பொதுமக்களிடம் அடையாளப்படுத்துவதிலும் , ஞாபகப்படுத்துவதிலும் zomato சிறப்பான யுக்திகளை கையாண்டு... மேலும் பார்க்க