செய்திகள் :

Health: இந்தப் பிரச்னைக்கு உங்க ஹேண்ட்பேக்கூட காரணமா இருக்கலாம்!

post image

'' 'வலதுபக்கம் தோள்பட்டை ரொம்ப வலிக்குது, அந்தக் கையில் இருக்கிற விரல்களெல்லாம் சில நேரங்களில் உணர்ச்சியே இல்லாத மாதிரி வெலவெலத்துப் போயிடுது. கழுத்து வலிக்குது, இடுப்பு வலிக்குது, தலைவலிகூட அடிக்கடி வருது...’ - இத்தனை புகார்ப் பட்டியலையும் நீங்கள் அடிக்கடி யாரிடமாவது சொல்லிப் புலம்பிக்கொண்டிருக்கிறீர்களா? இவற்றுக்கெல்லாம் காரணம் உங்களுடைய ஹேண்ட்பேக் ஆகவும் இருக்கலாம் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா?'' என்று கேட்கிறார் ஆயுர்வேத மருத்துவரும், வலி நீக்க நிபுணருமான மகேஸ்வர ராவ். இந்தப் பிரச்னை பற்றி விளக்கமாகப் பேசச் சொல்லி அவரிடம் கேட்டோம்.

pain

``வருடக் கணக்காக ஒரு பக்கம் மட்டுமே ஹேண்ட்பேக் மாட்டிக்கொண்டிருக்கிற பெண்களுக்கு, அவர்களுடைய நடையே ஒரு பக்கம் சாய்ந்ததுபோல இருக்கும்.

இருபக்கமும் சமமாக இருக்கிற தோள்பட்டையில், ஒரு பக்கம் மட்டும் தொடர்ந்து கனம் அழுத்தும்போது, அதைச் சமாளிக்க உடம்பானது தன்னையறியாமல் அதனுடைய எதிர்ப்பக்கத்தில் சாய ஆரம்பிக்கும். நாளடைவில் இப்படிச் சாய்வதே ஒரு பழக்கமாகிவிட்டிருக்கும். இதைச் சற்றுக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே கண்களுக்கு புலப்படும். இது முதல் பிரச்னை.

தோள்பட்டை வலி

காலேஜ் போகும் கேர்ள்ஸோ அல்லது வேலைக்குப் போகும் பெண்களோ அவர்களுடைய ஹேண்ட் பேக்கில் ஒரு லன்ச் பாக்ஸ், ஒரு வாட்டர் பாட்டில், ஒன்று அல்லது இரண்டு செல்போன், ஒரு பர்ஸ், ஒரு குடை என இத்தனையையும் வைத்திருப்பார்கள் (ஒரு சிலரே லன்ச் பேக்கைத் தனியாக எடுத்துச் செல்கிறார்கள்).

இவ்வளவு கனத்தையும் வருடக் கணக்கில் வலதுபக்கமே மாட்டிக்கொண்டிருந்தால், அந்தப் பக்கத்து தோள்பட்டையில் இருக்கிற தசையும் சில நரம்புகளும் அழுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இதனால், அந்தப் பகுதிக்கு ரத்தவோட்டம் செல்வதில் சிக்கல் ஏற்படும். ரத்தவோட்டத்துக்குத் தடை ஏற்பட்டால், அந்தக் கையின் விரல்களில் உணர்வு மெல்ல மெல்லக் குறைய ஆரம்பிக்கும். இதையும் நீங்கள் கண்டுகொள்ளாமலே இருந்தீர்கள் என்றால், எதிர்காலத்தில் தோள்பட்டை இணைப்புகள் தேய ஆரம்பிக்கும். இதன் தொடர்ச்சியாகக் கழுத்து வலியும் தலைவலியும் வரும். இது இரண்டாவது பிரச்னை.

மூன்றாவது பிரச்னை, வலதுபக்கம் மட்டும் தொடர்ந்து கனம் அழுத்திக்கொண்டிருக்கும்போது, உங்கள் உடம்பு தன்னையறியாமல் எதிர்ப்பக்கம் சாயும் என்று சொன்னேன் இல்லையா? இது வருடக்கணக்காகத் தொடரும்பட்சத்தில் இடது காலின் முட்டியின் தேய்மானம், வலது காலைவிட அதிகமாக இருக்கும். தவிர, உடல் தன் வெயிட்டை ஒரு பக்கமே சாய்ப்பதால் இடுப்பு வலியும் வரும்'' என்றவர், இதற்கான தீர்வுகளையும் சொன்னார்.

Pain in bone

''ஒரே பக்கம் மட்டும் ஹேண்ட் பேக்கை மாட்டாதீர்கள். 10 நிமிடம் வலதுபக்கம் என்றால், அடுத்த 10 நிமிடம் இடதுபக்கத் தோள்பட்டையில் மாட்டுங்கள். லன்ச் பேக்கை தனியாக எடுத்துச் செல்லுங்கள். அதை, ஹேண்ட் பேக் மாட்டுகிற பக்கத்தின் எதிர்பக்கத்தில் தூக்கிச் செல்லுங்கள். எடை இரண்டு கைகளிலும் சமமாக இருந்தாலே இந்தப் பிரச்னை வராது. அல்லது முதுகுப்பக்கமாக, இரண்டு தோள்பட்டைகளிலும் மாட்டுகிற பைகளுக்கு மாறிவிடுங்கள். ஒருவேளை பிரச்னை ஏற்கெனவே வந்துவிட்டது என்றாலும், நான் முதலில் சொல்லியிருக்கிற வழிமுறைகளையே பின்பற்றுங்கள். கூடவே, கழுத்தை இட, வலமாகத் திருப்புகிற பயிற்சி, கைகளைக் கீழே, மேலே உயர்த்தி இறக்குகிற பயிற்சிகளைத் தினமும் 5 அல்லது 10 நிமிடங்கள் செய்து வாருங்கள். அழுத்தப்பட்ட தசைகள், நரம்புகளுக்கு ரத்தம் பாய்ந்து படிப்படியாகப் பிரச்னை சரியாகும்.'' என்கிறார்.

Health: மல்டி வைட்டமின் மாத்திரைகள்... யார், எவ்வளவு நாள்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?!

பொதுவாக நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் உணவில் இருந்தே கிடைக்கும். அப்படி உடலுக்கு தேவையான சத்துக்கள் உணவில் இருந்து கிடைக்காதபட்சத்தில் மல்டி வைட்டமின் மாத்திரைகளை சிலர் எடுத்துக்கொள்வார்கள். மல்டி ... மேலும் பார்க்க

புற்றுநோய்கள் வராமல் தடுக்குமா கொழுப்பு அமிலங்கள்? - ஆய்வு முடிவு சொல்வதென்ன?

ஆரோக்கியமான கொழுப்புகள் என்று அழைக்கப்படும் ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 ஆகிய கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ள உணவுகள் மனிதனின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தவிர,... மேலும் பார்க்க

`எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாமல் பேப்பரில் ஜெராக்ஸ்; இதுவே சாட்சி’ - சாடும் அதிமுக மருத்துவரணி

"தென்காசியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு ஒருவர் எக்ஸ்ரே எடுத்ததற்கு, எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாமல் பேப்பரில் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்துள்ளனர். அந்தளவுக்கு சுகாதாரத் துறை உள்ளது" என்ற... மேலும் பார்க்க

குழந்தைகளை மரியாதையாக நடத்துவதால் கிடைக்கும் பலன்கள் தெரியுமா? - மனநல மருத்துவர் சொல்லும் டிப்ஸ்

'உங்கள் குழந்தைகளுக்கு மரியாதை கொடுங்கள்' என்று யாராவது உங்களிடம் சொன்னால், உங்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்? 'யெஸ், நான் எங்க பிள்ளைகளை வாங்க, போங்கன்னு மரியாதை கொடுத்துதான் பேசுவோம்' என்பீர்களா. ... மேலும் பார்க்க

'ங்ஙா...' உங்க பாப்பாவோட அழுகைக்கு அர்த்தம் தெரியணுமா?

பிறந்த குழந்தையின் முதல் அழுகைதான், அந்தக் குழந்தையின் குடும்பத்தார்க்கு மகிழ்ச்சியான விஷயம். மருத்துவரீதியாகவும் பிறந்த குழந்தை உடனே அழுதால்தான், குழந்தையின் முக்கிய உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கின்ற... மேலும் பார்க்க

வேலூர்: 8-வது பிரசவத்துக்காக வந்த இளம்பெண்... குடும்பக் கட்டுப்பாடு செய்ய மறுத்து தப்பி ஓட்டம்!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்துள்ள மேல்ஆலாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரசாந்த். இவரின் மனைவி அமுதா (29).இந்தத் தம்பதிக்கு ஏற்கெனவே 7 குழந்தைகள் பிறந்து, அதில் 2 குழந்தைகள் இறந... மேலும் பார்க்க