இந்தியாவின் டேவிட் வார்னர் இவர்தான்; இளம் வீரருக்கு புஜாரா புகழாரம்!
Hero Karizma XMR 250: செமயான ஸ்போர்ட்டி பைக் வரப் போகுது - ஹீரோ கரீஸ்மா XMR 250 | EICMA
நம் தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ தெரியும்தானே! அதைப்போன்று இத்தாலியில் EICMA (Esposizione Internazionale Ciclo Motociclo e Accessori) என்றொரு ஆட்டோ ஷோ நேற்றிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் நம் ஊர் நிறுவனங்கள் பல தங்களுடைய வாகனங்களை ரிவீல், லாஞ்ச் செய்து கலக்கி வருகிறார்கள்.
இந்த எய்க்மா ஷோவில் ஹீரோ அறிமுகப்படுத்திய கரீஸ்மா XMR 250 பைக்கின் வெளித்தோற்றத்தைப் பார்த்தால், எந்த இளசுகளுக்கும் பிடிக்கும். அத்தனை ஸ்டைல்! ஹீரோ அறிமுகப்படுத்திய மூன்றாவது பைக் இதுதான். எக்ஸ்ட்ரீம் 250-ல் இருக்கும் அதே இன்ஜின் செட்அப்புட்ன XMR 250 வந்திருக்கிறது.
இதன் பவர் 30hp மற்றும் டார்க் 25Nm. இத்தனை ஆர்பிஎம் இருப்பதால், இந்த செக்மென்ட்டில் வேகமான ஆக்ஸிலரேஷன் கொண்ட பைக்காக இது இருக்கும் என்கிறது ஹீரோ. லேட்டஸ்ட்டாக அப்பாச்சி ரிலீஸானதே நினைவிருக்கிறதா? அந்த ரேஸிங் விங்லெட்ஸ் - இந்த ஹீரோ XMR 250-லும் இருந்தன. இதை Aero Crowd என்கிறார்கள். இது பைக்கின் ஏரோ டைனமிக்குக்கு உதவும் என்கிறது ஹீரோ. இப்போதுள்ள கரீஸ்மா 210 மாதிரியேதான் இதன் முகம் இருக்கிறது. எர்கானமிக்ஸ் கொஞ்சம் மாற்றியமைத்திருக்கிறார்கள். முக்கியமாக, அந்த ஸ்போர்ட் பைக் ரைடிங் பொசிஷன், யார் உட்கார்ந்தாலும் சட்டென ஒரு ரேஸர் ஃபீலிங் வந்துவிடும் போங்கள்!
இதில் USD ஃபோர்க் கொடுத்திருக்கிறார்கள். ஸ்விட்சபிள் ஏபிஎஸ் வசதியும் இருந்தது. எக்ஸ்ட்ரீம் 250-ல் இருப்பது மாதிரியே பெட்ரோல் டேங்க். அதன் மேல் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி. பின் பக்கம் 150 செக்ஷன் எம்ஆர்எஃப் டயர்கள் கொடுத்திருக்கிறார்கள். ரியரில் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்அப், நிச்சயம் முதுகுவலி வராது என்று நினைக்கிறேன். பார்ப்பதற்கு பல்க்கியாக இருக்கிறது. எனினும் இந்த பைக்கின் எடை தெரியவில்லை.
இதுவும் ஹீரோ கரீஸ்மா 210 பைக்குக்கு மாற்றாக வரப் போவதில்லை. இதோடு சேர்ந்தே இந்த XMR 250 பைக்கும் விற்பனைக்கு வரும். இதுவும் அடுத்த ஆண்டுக்குள் வரலாம்!