தில்லி பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்...
KTM 390 Adventure R: `வெறித்தனமான ஆஃப்ரோடு அம்சங்கள்..!’ - கேடிஎம் 390 அட்வென்ச்சர் R | EICMA 2024
நம் தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ தெரியும்தானே! அதைப்போன்று இத்தாலியில் EICMA (Esposizione Internazionale Ciclo Motociclo e Accessori) என்றொரு ஆட்டோ ஷோ நேற்றிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் நம் ஊர் நிறுவனங்கள் பல தங்களுடைய வாகனங்களை ரிவீல், லாஞ்ச் செய்து கலக்கி வருகிறார்கள்.
கேடிஎம் அட்வென்ச்சர் பைக்கை நீங்கள் இப்போது புக் செய்தீர்கள் என்றால், சட்டுனு கேன்சல் பண்ணிட்டு கொஞ்ச மாசம் பழைய பைக்கையே ஓட்டுங்க! காரணம், ஏகப்பட்ட ஸ்பை புகைப்படங்களில் அடிபட்ட அட்வென்ச்சர் 390 பைக்கின் Camouflage கவரைத் திறந்துவிட்டது கேடிஎம். இதன் பெயர் அட்வென்ச்சர் 390 R.
அட்வென்ச்சர் சீரிஸில் Hardcore என்பார்களே… அப்படி அடி ஆழம் வரை புகுந்து புறப்படக் கூடிய வகையில் இதன் அட்வென்ச்சர் சமாச்சாரங்களை வடிவமைத்திருக்கிறது கேடிஎம். அதாங்க, வெறித்தனமான ஆஃப்ரோடு அம்சங்களைத்தான் சொல்கிறேன். முக்கியமாக அந்த Mitas ஆஃப்ரோடு டயர்கள்… எம்மாடியோவ்! ஏதோ ட்ராக்டர் டயர்கள்போல் பார்ப்பதற்கே கரடுமுரடாக… ஆஃப்ரோடு செய்தால் கிண்ணென்று இருக்கும் என்று நினைக்கிறேன். இதன் சஸ்பென்ஷன் டிராவல் 200 மிமீ-க்கு மேலேயோ…. ஆனால் நிச்சயம் குறையாமல் இருக்கலாம் என்று நினைக்கிறேன். இதன் அளவுகள் தெரியவில்லை.
ஓட்டுதலுக்குத் துணைபுரியும் கிண்ணென்ற USD ஃபோர்க்ஸ் இதில் இல்லாமல் இருக்கிறது. அதேபோல், ஸ்போக் வீல்கள்தான் கொடுத்திருக்கிறார்கள். முன் பக்கம் இருந்து இதன் ஹெட்லைட்டைப் பார்ப்பதற்கு ஏதோ ரோபோட்டிக் பைக் மாதிரி இருக்கிறது அட்வென்ச்சர் R. டக்கார் ராலியில் பயன்படுத்தப்படும் 890R பைக்கை இன்ஸ்பயர் செய்து இதை டிசைன் செய்திருக்கிறார்கள். ரன்னிங் லைட்கள் அழகாக இருக்கின்றன. இங்கே காட்சிப்படுத்தப்பட்ட பைக்கில் 21 மற்றும் 18 இன்ச் வீல்கள் கொடுத்திருந்தார்கள். ஆனால், 19 இன்ச் வீல் வெர்ஷன் ஒன்றும் ஆப்ஷனலாக வரப்போகிறதாம்.
உயரமான ஃபெண்டர், உயரமான சீட்டிங் பொசிஷன் என்று இருக்கிறது இதன் சீட்டிங் பொசிஷன். ‛சீட் உயரத்தைக் கொஞ்சம் இதிலயாச்சும் குறைங்க கேடிஎம்!’ என்று போனமுறை மோட்டார் விகடனில் கதறியது கேடிஎம்-க்குக் கேட்டிருக்குமோ? இந்த அட்வென்ச்சர் R 390 பைக்கில், உயரம் குறைந்த சீட்டிங் பொசிஷன் கொண்ட பைக் ஒன்றும் ஆப்ஷனலாக வரப் போகிறதாம். என்ன, இதன் சஸ்பென்ஷன் டிராவல் மட்டும் கொஞ்சம் கம்மியாக இருக்கும்! ராலி பைக் மாதிரி இருக்கும் இந்த 390, இந்தியாவுக்கு வரும்போதும் இதே ஸ்டைலை ஃபாலோ பண்ணுங்க ப்ளீஸ்! தேங்க்ஸ் கேடிஎம்!
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்:https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41