Hero Xtreme 250R: `0-60 KM 3.25 விநாடிகளில்..!' - ஹீரோவில் இன்னொரு ஸ்போர்ட்ஸ் பைக்! | EICMA
நம் தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ தெரியும்தானே! அதைப்போன்று இத்தாலியில் EICMA (Esposizione Internazionale Ciclo Motociclo e Accessori) என்றொரு ஆட்டோ ஷோ நேற்றிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் நம் ஊர் நிறுவனங்கள் பல தங்களுடைய வாகனங்களை ரிவீல், லாஞ்ச் செய்து கலக்கி வருகிறார்கள்.
போன ஆண்டு எக்ஸ்போவில் Xtunt 2.5R என்றொரு கான்செப்ட் பைக்கைக் காட்சிப்படுத்தி இருந்தார்கள் ஹீரோ மோட்டோ கார்ப். அந்த பைக்தான் இப்போது தயாரிப்பு மாடலாக எக்ஸ்ட்ரீம் 250R பைக்காக வந்திருக்கிறது.
இதை ஒரு நேக்கட் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலில் டிசைன் செய்திருக்கிறார்கள். கரீஸ்மா, ஃபுல்லி ஃபேர்டு ஸ்போர்ட்ஸ் பைக் என்றால், இது NS.. அதாவது நேக்கட் ஸ்போர்ட் என்று சொல்லலாம். இதிலும் அந்த விங்லெட்ஸ் இருந்தன. ஆனால், அவை Shroudகள். எக்ஸ்ட்ரீம் பைக்கில் பெரிய பைக் இந்த மாடல். 250சிசி, DOHC இன்ஜின் செட்அப். இதன் பவரும் டார்க்கும் கரீஸ்மா பைக்கைப்போல் அதேதான். 30hp மற்றும் 25Nm. இது 0-60 கிமீயை வெறும் 3.25 விநாடிகளில் கடக்கும் என்கிறது ஹீரோ. பைக்கின் பெரிய பேசுபொருளாக இருக்கப்போவது இதிலுள்ள ட்ரெல்லிஸ் ஃப்ரேம்தான். கேடிஎம் பைக்கைப்போல் இதன் ஓட்டுதல் தரம் இருக்கும்.
அதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. முன் பக்கம் அந்தத் தடிமனான 43மிமீ USD ஃபோர்க்குகள் சூப்பர். இதிலும் ஸ்விட்சபிள் ஏபிஎஸ் மோடுகள் கொடுத்திருக்கிறார்கள். புது லிக்விட் கூல்டு இன்ஜின் செட்அப் வரும்; ஆனால், இதே இன்ஜின் செட்அப்பை ஏன் எக்ஸ்பல்ஸில் கொடுக்கவில்லை ஹீரோ?
இதன் விலை பற்றியும், விற்பனை பற்றியும் தகவல் இல்லை. ஆனால் கூடிய சீக்கிரமே இந்த லிக்விட் கூல்டு எக்ஸ்ட்ரீம் இந்தியாவில் ஓட ஆரம்பிக்கும்.