செய்திகள் :

Hero Karizma XMR 250: செமயான ஸ்போர்ட்டி பைக் வரப் போகுது - ஹீரோ கரீஸ்மா XMR 250 | EICMA

post image

நம் தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ தெரியும்தானே! அதைப்போன்று இத்தாலியில் EICMA (Esposizione Internazionale Ciclo Motociclo e Accessori) என்றொரு ஆட்டோ ஷோ நேற்றிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் நம் ஊர் நிறுவனங்கள் பல தங்களுடைய வாகனங்களை ரிவீல், லாஞ்ச் செய்து கலக்கி வருகிறார்கள். 

EICMA 2024

இந்த எய்க்மா ஷோவில் ஹீரோ அறிமுகப்படுத்திய கரீஸ்மா XMR 250 பைக்கின் வெளித்தோற்றத்தைப் பார்த்தால், எந்த இளசுகளுக்கும் பிடிக்கும். அத்தனை ஸ்டைல்! ஹீரோ அறிமுகப்படுத்திய மூன்றாவது பைக் இதுதான். எக்ஸ்ட்ரீம் 250-ல் இருக்கும் அதே இன்ஜின் செட்அப்புட்ன XMR 250 வந்திருக்கிறது. 

Hero Karizma XMR 250

இதன் பவர் 30hp மற்றும் டார்க் 25Nm. இத்தனை ஆர்பிஎம் இருப்பதால், இந்த செக்மென்ட்டில் வேகமான ஆக்ஸிலரேஷன் கொண்ட பைக்காக இது இருக்கும் என்கிறது ஹீரோ. லேட்டஸ்ட்டாக அப்பாச்சி ரிலீஸானதே நினைவிருக்கிறதா? அந்த ரேஸிங் விங்லெட்ஸ் - இந்த ஹீரோ XMR 250-லும் இருந்தன.  இதை Aero Crowd என்கிறார்கள். இது பைக்கின் ஏரோ டைனமிக்குக்கு உதவும் என்கிறது ஹீரோ. இப்போதுள்ள கரீஸ்மா 210 மாதிரியேதான் இதன் முகம் இருக்கிறது. எர்கானமிக்ஸ் கொஞ்சம் மாற்றியமைத்திருக்கிறார்கள். முக்கியமாக, அந்த ஸ்போர்ட் பைக் ரைடிங் பொசிஷன், யார் உட்கார்ந்தாலும் சட்டென ஒரு ரேஸர் ஃபீலிங் வந்துவிடும் போங்கள்! 

Hero Karizma XMR 250

இதில் USD ஃபோர்க் கொடுத்திருக்கிறார்கள். ஸ்விட்சபிள் ஏபிஎஸ் வசதியும் இருந்தது. எக்ஸ்ட்ரீம் 250-ல் இருப்பது மாதிரியே பெட்ரோல் டேங்க். அதன் மேல் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி. பின் பக்கம் 150 செக்ஷன் எம்ஆர்எஃப் டயர்கள் கொடுத்திருக்கிறார்கள். ரியரில் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்அப், நிச்சயம் முதுகுவலி வராது என்று நினைக்கிறேன். பார்ப்பதற்கு பல்க்கியாக இருக்கிறது. எனினும் இந்த பைக்கின் எடை தெரியவில்லை. 

இதுவும் ஹீரோ கரீஸ்மா 210 பைக்குக்கு மாற்றாக வரப் போவதில்லை. இதோடு சேர்ந்தே இந்த XMR 250 பைக்கும் விற்பனைக்கு வரும். இதுவும் அடுத்த ஆண்டுக்குள் வரலாம்!

RapteeHV: `எலெக்ட்ரிக் கார் பிளக் மூலம் பைக் சார்ஜ்; புதுமைகள் பல கொண்ட T30’ - என்ன ஸ்பெஷல்?

RapteeHV T30 Electric Bike | Jayapradeep Vasudevan - Raptee.HVஎலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களுக்கான மார்க்கெட் விரிவடைகிற சூழலில் புதிய ஸ்டார்ட்-அப்கள் புதுபுது சாத்தியங்களோடு களமிறங்குகின்றன. அவற்றில... மேலும் பார்க்க

Hero Vida Z: அட்டகாச லுக்கில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... நம்ம ஊருக்கு எப்போ வரும் தெரியுமா? | EICMA

EICMA ஷோவில் ஹோண்டா ஆக்டிவாவை அறிமுகப்படுத்தி அதகளம் செய்தது மாதிரி, ஹீரோ மோட்டோ கார்ப்பும் தன் பங்குக்கு விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் Z எனும் மாடலை அறிமுகப்படுத்தி இருந்தது.இதை ‛இஸட்’ என்று சொல... மேலும் பார்க்க

Aprilia Tuono 457: `ஏப்ரிலியா என்றாலே தரம்தான்’ - அடுத்த வருஷம் இந்தியாவுக்கு வருது Tuono 457| EICMA

நம் தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ தெரியும்தானே! அதைப்போன்று இத்தாலியில் EICMA (Esposizione Internazionale Ciclo Motociclo e Accessori) என்றொரு ஆட்டோ ஷோ நேற்றி... மேலும் பார்க்க

Hero Xpulse 210: ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210-ல் `அட்வென்ச்சர் விரும்பிகள்' கேட்ட சூப்பர் வசதி! | EICMA 2024

EICMA ஷோவில் ஹீரோவும் தன் அதகளத்தைக் காட்டிவிட்டது. எக்ஸ்பல்ஸ் 200 பைக்கைப் பார்த்தாலே யாருக்கும் ராலியிலோ அல்லது ஏதாவது அட்வென்ச்சர் பந்தயத்திலோ கலந்து கொள்ள வேண்டும்போல் சட்டெனத் தோன்றும்.EIC... மேலும் பார்க்க

KTM 390 Adventure R: `வெறித்தனமான ஆஃப்ரோடு அம்சங்கள்..!’ - கேடிஎம் 390 அட்வென்ச்சர் R | EICMA 2024

நம் தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ தெரியும்தானே! அதைப்போன்று இத்தாலியில் EICMA (Esposizione Internazionale Ciclo Motociclo e Accessori) என்றொரு ஆட்டோ ஷோ நேற்றி... மேலும் பார்க்க

Hero Xtreme 250R: `0-60 KM 3.25 விநாடிகளில்..!' - ஹீரோவில் இன்னொரு ஸ்போர்ட்ஸ் பைக்! | EICMA

நம் தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ தெரியும்தானே! அதைப்போன்று இத்தாலியில் EICMA (Esposizione Internazionale Ciclo Motociclo e Accessori) என்றொரு ஆட்டோ ஷோ நேற்றி... மேலும் பார்க்க