Indian Railways: பயணிகளுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கும் ரயில் - எங்கு தெரியுமா?
ரயில் போக்குவரத்து பெரும்பாலான மக்கள் விரும்பும் ஒரு பொதுப் போக்குவரத்து ஆக உள்ளது. வசதியாவும், குறைந்த கட்டணத்திலும் இருப்பதால் நடுத்தர மக்களின் முதல் தேர்வாக இந்த ரயில் போக்குவரத்து உள்ளது.
பொதுவாக ரயில் பயணங்களின் போது உணவுகள் விற்கப்படும், அதனை காசு கொடுத்த பயணிகள் வாங்கிக் கொள்வார்கள்.
ஆனால் இந்தியாவில் ஒரு தனித்துவமான ரயில் உள்ளது. அந்த ரயிலில் பயணிகளுக்கு இலவசமாக காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு அளிக்கப்படுகிறது. கேட்கவே ஆச்சரியமாக உள்ளதல்லவா?

இந்த சிறப்பு ரயில் "அமிர்தசரஸ்-நாந்தேட் சச்கண்ட் எக்ஸ்பிரஸ்" ஆகும். இந்த ரயிலில் தான் மூன்று வேலையும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் குருத்வாராவுக்கும் , மகாராஷ்டிரா மாநிலம், நாந்தேட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஹசூர் சாஹிப் குருத்வாராவுக்கும் இடையே இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
1995 ஆம் ஆண்டு இந்த ரயில் வாரத்திற்கு ஒரு முறை இயக்கப்பட்டு வந்தது. பின்னர் வாரத்திற்கு இரண்டு முறை இயக்கப்பட்டது. 1997 - 1998 வரை வாரத்தில் ஐந்து நாட்கள் இயக்கப்பட்டது. 2007 முதல் இந்த ரயில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் இயக்கப்பட்டு வருகிறது.
29 ஆண்டுகளாக பயணிகள் இலவச உணவைப் பெற்று வருகின்றனர். பொதுவாக மெனுக்களில் சோலே, பருப்பு, கிச்சடி, ஆலு, கோபி போன்ற உணவுகள் வழங்கப்படுகின்றன.
லங்கரில் பரிமாறப்படும் உணவு ஒவ்வொரு நாளும் மாறுபடும். அதன் செலவுகள் குருத்வாராக்களால் பெறப்படும் நன்கொடைகள் மூலம் ஈடுகட்டப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.