செய்திகள் :

IndiGo: "இன்டிகோ விமானத்தில் சேவை மோசம்; AC கூட இல்லாமல் பயணிகள் தவிப்பு" - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

post image

இன்டிகோ விமானத்தின் மீது சமீபகாலமாக நிறைய கேளாறுகள் ஏற்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

கடந்த ஜூன் மாதம்கூட பணியிடத்தில் சாதிய ரீதியிலான ஒடுக்குமுறையை எதிர்கொண்டதாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இன்டிகோ விமானி ஒருவர் 3 உயர் அதிகாரிகள் மீது புகார் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

சமீபத்தில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, "ஏ.சி அதிகம் இல்லாத இந்த விமானங்களில் பயணிக்கும் பிசினஸ் பயணிகள் F11 ரேசர்கள் போல, வெப்பம் மற்றும் வியர்வை மிகுந்த பயணத்தில் ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ குறைகிறார்கள்.

IndiGO: "பறக்கத் தகுதியில்லை; செருப்பு தைக்க போ..." - குற்றச்சாட்டுக்கு நிறுவனத்தின் பதில் என்ன?

IndiGO
IndiGO

தமிழ்நாட்டிற்குள் இருக்கும் மாவட்டங்களை இணைக்கும் விமானங்கள் சிறிய ATR விமானங்களாக இருப்பது குறித்தும், பெரிய 320 விமானங்களாக இல்லாதது குறித்தும் பல தொழிலதிபர்கள் புகார் அளித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிற்குப் பெரிய விமானங்களை அறிமுகப்படுத்தாமல், புதிய, நவீன விமான நிலையங்களை அறிமுகப்படுத்துவதில் என்ன பயன்?

ஒன்றிய அரசும், இண்டிகோ நிறுவனமும் அதிக கட்டணங்களை வசூலிக்கும்போது, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்தில் கொள்ளாமல் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்." என்று புகார் தெரிவித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிற்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் தற்போது, இன்டிகோ விமானத்தின் கோளாறு குறித்தும் AC பயன்படுத்தாமல் பயணிகளை தவிக்கவிட்டது குறித்தும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, "இன்டிகோ indiGo6E, கேளாறுகளை சரிசெய்யும் உங்கள் பாதுகாப்பு அக்கறையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் குறைந்தபட்சம் பயணிகளை வசதியாக வையுங்கள். விமானம் மூச்சு முட்டும் அளவுக்கு ஏசி இல்லாமல் இருந்ததால் (உங்கள் ஏடிஆர் விமானத்தின் ஏசி தரையில் இருக்கும்போது வேலை செய்வதே இல்லை) தாய்மார்களும் வயதானவர்களும் மிகவும் விரக்தியடைந்துள்ளனர்.

இப்போது உங்கள் விமானம் அதைவிடவும் மோசமாக உள்ளது. பயணிகள் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்து மீண்டும் ஏசி இல்லாமல் மூச்சு முட்ட இருந்தனர்... பேருந்தைக் குளிர்விக்க முயற்சிப்பதற்காக ஓட்டுநர் இப்போது நிழலில் நிறுத்தியுள்ளார்." என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தொடர்ந்து இன்டிகோ விமான சேவை குறித்து புகாரளித்து வருகிறார். தற்போது இந்தப் பதிவும் சமூகவலைதளங்களில் வைரலாகி பலரும் இன்டிகோவின் சேவை குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"கொள்கைப் படையாய்த் திரண்ட மக்கள்; 2 நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கூட்டங்கள்" -மு.க.ஸ்டாலின்

தமிழக அரசியலில் எந்தக் கட்சிக்கு அதிகம் கூட்டம் கூடுகிறது என்பதுதான் இப்போது போட்டியாக இருக்கிறது. வாரந்தோறும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு மாவட்டமாக மக்களைச் சந்தித்து வரும் விஜய்க்கு கூட... மேலும் பார்க்க

"சிவகங்கை ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில் கட்டாய மதமாற்றம்"- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் அறி... மேலும் பார்க்க

GST 2.0: "கூட்டிய வரியைக் குறைத்த அரசாங்கம் மோடியினுடையது மட்டுமே" - நயினார் நாகேந்திரன் பெருமிதம்

திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந... மேலும் பார்க்க

GST 2.0 இன்று முதல் அமல்; தீப்பெட்டி, ஐஸ்கிரீம் முதல் கார் வரை எவ்வளவு வரி குறைகிறது?

கடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த 'ஜி.எஸ்.டி 2.0' இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம் மற்றும் 28 சதவிகிதம் ... மேலும் பார்க்க

Modi: "நாளை முதல் புதிய GST அமல்; GST Bachat Utsav என்ற விழாவும் தொடங்கும்" - பிரதமர் மோடி உரை

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது சுதந்திர தின விழா உரையில் இந்தியப் பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதாக அறிவித்தார்.2017 ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட போது... மேலும் பார்க்க

H-1B Visa: "இந்தியர்களுக்குப் பெரும் சவால் காத்திருக்கிறதா?" - பேராசிரியர் கிளாட்சன் சேவியர் பேட்டி

அமெரிக்காவைப் பின்னோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார் அதிபர் ட்ரம்ப். அவருடைய அறிவிப்புகள் வரக்கூடிய நாட்களில் பெரும் பிரச்னையாக மாறும் குறிப்பாக இந்தியர்களுக்குப் பெரும் சிக்கல்களும் சவால்களும் ... மேலும் பார்க்க