IPL: "கோலியும் நானும் இத செய்திருந்தா, 2016-ல் ஆர்சிபி கோப்பை வென்றிருக்கும்..." - கே.எல். ராகுல்
2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.
இதற்கான ஏலம் என்பது வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. லக்னோ அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு நடைபெற இருக்கும் மெகா ஏலத்தில் பங்கேற்க இருக்கிறார் கே.எல்.ராகுல். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், லக்னோ அணியிலிருந்து விலகியது, இந்தியாவின் டி20 அணியில் ஆட விருப்பம் இருப்பது என கிரிக்கெட் தொடர்பான பல விஷயங்களை கே.எல் ராகுல் பகிர்ந்திருந்தார்.
அவ்வகையில் ஆர்சிபி அணியில் விளையாடியது குறித்தும் பேசியிருக்கிறார். அப்போது, "2016 ஐ.பி.எல் ஃபைனல் பற்றி நானும் விராட் கோலி பலமுறை பேசுகிறோம். எங்கள் இருவரில் ஒருவர் இன்னும் கொஞ்ச நேரம் அதிகமாக விளையாடியிருந்தால் நாங்கள் அந்த வருடமும் கோப்பையை வென்றிருப்போம்.
அந்த வருடத்தில் நாங்கள் மிகவும் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இருந்தோம். சின்னசாமி மைதானத்தில் கோப்பையை வென்று கதையை மகிழ்ச்சியாக முடித்திருப்போம். ஆனால் துரதிஷ்டவசமாக அது நடைபெறவில்லை. 2016 சீசனில் பெங்களூரு அணியில் என்னுடைய நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவிட்டேன்.
பெங்களூரு என்னுடைய சொந்த ஊர். அங்குள்ள மக்கள் என்னைச் சிறப்பாக வரவேற்றார்கள். அந்த வகையில் 2016லேயே ஆர்சிபி வெற்றி பெற வேண்டிய கோப்பை ஜஸ்ட் மிஸ்ஸில் தவறியது" என்று ராகுல் காந்தி வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...