செய்திகள் :

IPL 2025 : தக்கவைக்கப்படும் வீரர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம்... BCCI கொடுத்த புதிய அப்டேட்!

post image

ஐபிஎல் 2025-ல் வீரர்களுக்கான சம்பள தொகை அடுக்குகளில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது பிசிசிஐ. இதன் மூலம் ரிட்டன்ஷன் செய்யப்படும் வீரர்களுக்கு அவர்கள் விருப்பப்படி 75 கோடியை பிரித்துக்கொடுக்கலாம்.

அதாவது ரிட்டன்ஷன் தொகை அடுக்கு, ப்ளேயர் நம்பர் 1க்கு ரூ.18 கோடி, பிளேயர் நம்பர் 2க்கு ரூ.14 கோடி, பிளேயர் நம்பர் 3க்கு ரூ.11 கோடி... என இருப்பதை உடைத்து, 75 கோடி ரூபாயை ஃப்ரான்சஸியின் விருப்பப்படி பணத்தைப் பகிர வழிவகை செய்துள்ளனர்.

75 கோடிக்குள் 5 பேருக்கான ரிட்டன்ஷன் தொகையை செலுத்த முடியாதபட்சத்தில் கூடுதல் தொகை ஏலம் எடுக்க வேண்டிய தொகையில் இருந்து கழிக்கப்படும்.

IPL Mega Auction 2025

75 கோடி என்பது வரைமுறை செய்யப்பட்ட தொகை. இதை மீறி செல்லாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. ரிட்டன்ஷன் தொகை 75 கோடிக்கு குறைவாக இருந்தால் மீதமிருக்கும் தொகையை ஏலத்துக்கு பயன்படுத்த முடியாது.

இந்த புதிய முறையில் ரிட்டன்ஷன் முடிவுகளை எடுக்க அணி நிர்வாகத்துக்கு கூடுதல் சுதந்திரம் கிடைக்கிறது என்கின்றனர்.

உதாரணமாக சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணியை எடுத்துக்கொள்வோம்,

சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணி ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் க்ளாசன், பாட் கம்மின்ஸ், நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய 5 பேரையும் தக்க வைக்க முயற்சிக்கின்றது.

ரிட்டன்ஷனில் நம்பர் ஒன் ப்ளேயருக்கு 18 கோடி என்றால் சரியாக தக்கவைக்க முடியாது. சன் ரைசஸ் ஹைத்ராபாத் க்ளாசனுக்கு 23 கோடி வழங்க முடிவு செய்திருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இது தக்கவைக்கும் நம்பர் ஒன் ப்ளேயருக்கான தொகையை விட 5 கோடி அதிகம்.

Klaasen SRH

க்ளாசன் அவரது 35 ஐபிஎல் போட்டிகளில் கிட்டத்தட்ட 1000 ரன்கள் விளாசியிருக்கிறார். 2024 ஐபிஎல்லில் 15 போட்டிகளில் 479 ரன்கள் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட்171.07. க்ளாசனுக்கான தொகையை சன் ரைசஸ் அணி வழங்கத்தானே வேண்டும்? மேலும் அவருக்காக மற்றொருவரை இழக்க முடியாதபடி 5 வீரர்களுமே அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளனர்.

இதனால்தான் புதிய நெறிமுறை ஐபிஎல்லில் அணி நிர்வாகங்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு அணி நிர்வாகமும் தக்கவைக்கும் வீரர் குறித்து புதிய ஸ்ட்ராடஜிகளை வகுத்து வருகின்றன.

IND Vs NZ : ரச்சினின் வெற்றிக்கு உதவிய 'சென்னை' பயிற்சி - ஆட்டநாயகனான CSK வீரர் பேசியதென்ன?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் 6 டக் அவுட்டுடன் 46 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அ... மேலும் பார்க்க

IND Vs NZ : 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் வெற்றி பெற்ற நியூசிலாந்து!

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.... மேலும் பார்க்க

Dhoni : வரும் ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா? - சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் கொடுத்த அப்டேட்!

வருகிற ஐபிஎல் சீசனில் சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவாரா? என்பது பற்றி அதன் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் பேசியிருக்கிறார்.2025-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிற... மேலும் பார்க்க

Ind Vs Nz : ``46 ஆல் அவுட்டுக்கு நானே பொறுப்பு!'' - என்ன சொல்கிறார் கேப்டன் ரோஹித்?

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே உள்ளூர் மைதானங்களில் இந்தியாவின் குறைந்தபட்ச... மேலும் பார்க்க

INDvNZ: `முடிச்சுவிட்டீங்க போங்க' - 46 ரன்களுக்கு ஆல் அவுட்; இந்தியா சொதப்பியது எங்கே?

பெங்களூருவில் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது. கடைசியாக 2020-21 பார்டர் கவாஸ்கர் தொடரில் அடிலெய்... மேலும் பார்க்க

INDvNZ : 0,0,0,0 - 4 வீர்ரகள் டக்; சுதாரிக்காத ரோஹித்; கோலி - பெங்களூருவில் தடுமாறும் இந்தியா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று மழையினால் ஆட்டம் முழுமையாக தடைப்பட்டிருந்தது. இன்றுதான் போட்டி தொடங்கியது. முதல் செ... மேலும் பார்க்க