செய்திகள் :

IPL Mega Auction : 'சென்னையில் மீண்டும் சாம் கரண்; வரிசையாக Unsold ஆன வீரர்கள்!' - ஏல அப்டேட்ஸ்!

post image
ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதியில் இரண்டாம் நாளாக இன்று நடந்து வருகிறது. இன்றைய நாளின் தொடக்கத்திலேயே சென்னை அணி சாம் கரனை ஏலத்தில் எடுத்திருக்கிறது.
Sam Curran

சாம் கரண் கடந்த 2020 மற்றும் 2021 சீசன்களில் சென்னை அணிக்காக ஆடியிருந்தார். அதிரடியாக ஆடக்கூடிய பேட்டர் மற்றும் ஆக்ரோஷமாக வீசக்கூடிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் சென்னை அணியிலுமே முக்கிய வீரராக இருந்தார். ரசிகர்களும் செல்லமாக 'சுட்டிக் குழந்தை' என்றும் அழைத்திருந்தனர். கடந்த சில சீசன்களாக பஞ்சாப் அணிக்காக ஆடியிருந்தார். அங்கேயும் ஒரு ஆல்ரவுண்டராக நன்றாக செயல்பட்டிருந்தார். அந்த அணிக்கு கேப்டனாகவும் இருந்திருக்கிறார். கடந்த சீசனில் 270 ரன்கள் எடுத்ததோடு 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

சாம் கரனின் இன்னொரு பெரிய பலமான விஷயம், அவரை எந்த ஆர்டரில் வேண்டுமானாலும் இறக்கி Pinch Hitter ஆக பயன்படுத்தலாம். அதனால்தான் இந்த ஏலத்தில் சென்னை அணி சாம் கரணுக்காக முயன்றது. சென்னையும் லக்னோவும் சாம் கரணுக்காக போட்டியிட இந்த ரேஸில் சென்னை முந்திக் கொண்டு 2.40 கோடிக்கு சாம் கரணை வாங்கியது.

SAM CURRAN

இரண்டாம் நாளில் இப்போது வரைக்கும் கேன் வில்லியம்சன், க்ளென் பிலிப்ஸ், ரஹானே, ஷர்துல் தாகூர், மயங்க் அகர்வால், பிரித்திவி ஷா ஆகியோரை எந்த அணியும் வாங்கவில்லை. அதேமாதிரி டூ ப்ளெஸ்சிஸை 2 கோடி ரூபாய்க்கு அதாவது அடிப்படை விலைக்கே டெல்லி வாங்கியிருக்கிறது. வாஷிங்டன் சுந்தரை குஜராத் அணி 3.20 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது. வேறு சில வீரர்களுடன் ஒப்பிடுகையில் வாஷிங்டன் சுந்தர் இன்னும் பெரிய தொகைக்கு தகுதியானவர்தான்.

IPL Mega Auction : '4.80 கோடிக்கு மும்பை வாங்கிய ஆப்கன் ஸ்பின்னர்!' - யார் இந்த அல்லா கஷன்ஃபர்?

ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதியில் இரண்டாம் நாளாக நடந்து வருகிறது. இந்த ஏலத்தில் ஸ்பின்னர்கள் செட்டில் வந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த அல்லா கஷன்ஃபர் என்கிற வீரரை மும்பை அணி 4.80 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக... மேலும் பார்க்க

Aus v Ind : 'ஆதிக்கம் செலுத்திய பும்ரா & கோ'- பெர்த்தில் இமாலய வெற்றி சாத்தியமானது எப்படி?

பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியை இந்திய அணி அபாரமாக வென்றிருக்கிறது. 534 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்து 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஒரு பெரிய தொடரின் முத... மேலும் பார்க்க

IPL Mega Auction: 'அஷ்வினுக்கு ஏன் 9 கோடி கொடுத்தோம் தெரியுமா?' - பயிற்சியாளர் ஃப்ளெம்மிங் விளக்கம்

ஐ.பி.எல் மெகா ஏலம் நேற்று நடந்திருந்தது. இந்த ஏலத்தில் சென்னை அணி முதல் நாளில் 7 வீரர்களை வாங்கியிருந்தது. அதில் அஷ்வினை சென்னை அணி வாங்கியதைத்தான் அத்தனை பேரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அஷ்... மேலும் பார்க்க

IPL Mega Auction: 'கம்பேக் அஷ்வின்; டாப் ஆர்டருக்கு திரிபாதி!' - ஏலத்தில் சென்னை எப்படி செயல்பட்டது?

ஐ.பி.எல் மெகா ஏலத்தின் முதல் நாள் முடிந்திருக்கிறது. எல்லா அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை கோடிகளை கொட்டி அள்ளியிருக்கின்றன. சென்னை அணியின் ஏல மேஜையும் நேற்று பரபரப்பாகவே இருந்தது. நேற்று மட்டும்... மேலும் பார்க்க

IPL Mega Auction : 'முதல் நாள் முடிவில் எந்தெந்த அணியில் எந்தெந்த வீரர்கள்?' - முழு விவரம்!

ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதியில் நடந்து வருகிறது. முதல் நாள் ஏல நிகழ்வு முடிந்திருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை முதல் நாளில் எடுத்தது? இன்னும் எவ்வளவு தொகை மீதமிருக்கிறது என்பதைப்... மேலும் பார்க்க