அந்தியூரில் கோயில் நிலத்தில் அரசுக் கல்லூரி கட்டுவதற்கு எதிா்ப்பு
Israel - Palestine War : 'நீங்கள் உடன்படாமல்...' - போர் பேச்சுவார்த்தையிலிருந்து விலகும் கத்தார்!
கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் தொடங்கி இன்று வரை எந்தவித சமாதனமும் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது இஸ்ரேல் - பாலஸ்தீன போர். இந்தப் போரால் உலகளவில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இந்தப் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது உலக நாடுகளின் விருப்பம்.
இதன் முன்னெடுப்பாக கத்தார், அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் ஆரம்பத்தில் இருந்தே இஸ்ரேல் - பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டுவர பல முயற்சிகளை செய்துகொண்டிருந்தது...செய்துகொண்டும் இருக்கின்றன.
இந்த நிலையில், "இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பேச்சுவார்த்தை உடன்படாத வரை, கத்தார் மத்தியஸ்தம் செய்ய முடியாது. அந்தப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விலகுகிறோம். எப்போது இருநாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்படுகிறதோ, அப்போது கத்தார் அதற்கு உதவும்" என்று தற்போது கத்தார் அறிவித்துள்ளது.
இந்த தகவலை இஸ்ரேல், பாலஸ்தீனம், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு முன்னரே அறிவித்துவிட்டது கத்தார்.
சமீபத்தில், போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஒத்துகொள்ளாத ஹமாஸின் பிரதிநிதிகள் கத்தாரில் இருப்பது ஒப்புக்கொள்ள முடியாது என்று அமெரிக்கா கூறியிருந்தது. இதற்கு தற்போது கத்தார் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால், 'அது உண்மை அல்ல' என்று கத்தார் மற்றும் ஹமாஸ் என இருதரப்பும் மறுப்பும் கூறியுள்ளது.
பேச்சுவார்த்தையில் இருந்து தற்போது கத்தார் நீங்கிய உள்ள நிலையில், இனி இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் என்ன மாற்றம் நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.