செய்திகள் :

J&K Attack: `பாகிஸ்தானியர்கள் தண்ணீரின்றி இறந்துவிடுவார்கள்’ - பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

post image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்ட 2.5 மணி நேர பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (CCS) கூட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய அரசு பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருக்கிறது.

நிஷிகாந்த் துபே
நிஷிகாந்த் துபே பதிவு

இந்திய அரசின் இந்த நடவடிக்கையை பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``பாம்புக்கு தண்ணீர் கொடுக்கும் ஒப்பந்தத்தின் நாயகன் நேரு ஜி, 1960 இல் நோபல் பரிசு பெறுவதற்காக, சிந்து, ரவி, பியாஸ், செனாப், சட்லஜ் ஆகியவற்றின் தண்ணீரைக் கொடுத்து இந்தியர்களின் இரத்தத்தைச் சிந்தினார்.

இன்று, மோடி ஜி உணவு மற்றும் தண்ணீரை நிறுத்தியுள்ளார். பாகிஸ்தானியர்கள் தண்ணீரின்றி இறந்துவிடுவார்கள். இது 56 அங்குல மார்பு. ஹூக்கா, தண்ணீர், உணவு மற்றும் தண்ணீர் நிறுத்தப்படும். நாங்கள் பாஜக ஊழியர்கள். அவர்களை சித்திரவதை செய்த பிறகு நாங்கள் அவர்களைக் கொல்வோம்," எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"இந்த ரயில் நிலையத்தின் பணியாளர்களில் ஒருவருக்குக்கூடத் தமிழ் புரியல..." - துரை வைகோ வேதனை

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் முக்கிய நகரமாக விளங்கும் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இன்று (ஏப்ரல் 24) திடீர் ஆய்வு மேற்கொண்ட திருச்சி எம்.பி.யும் ம.தி.மு.கமுதன்மைச் செயலாளருமான துரை வைகோ, ரயில் ந... மேலும் பார்க்க

Pahalgam : இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் எடுத்த முக்கிய முடிவுகள்; சிம்லா ஒப்பந்தம் ரத்து?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்திய மட்டுமில்லாது உலக நாடுகள் பலவும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலு... மேலும் பார்க்க

'நாங்களும் தயார்' - பாகிஸ்தான் உத்தரவை அடுத்து இந்தியா நடத்தி முடித்த ஏவுகணை சோதனை

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி தந்தே ஆக வேண்டும் எனவும், ம... மேலும் பார்க்க

Pahalgam Attack: அட்டாரி - வாகா எல்லை மூடல் - இந்தியா, பாகிஸ்தான்; யாருக்கு என்னென்ன பாதிப்புகள்?

ஜம்மு காஷ்மீரின் பஹால்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக அட்டாரி - வாகா எல்லையை முடியிருக்கிறது. அட்டாரி - வாகா... மேலும் பார்க்க

Pahalgam Attack: `இந்தத் தாக்குதலுக்கு காஷ்மீரை அவதூறு செய்யாதீர்கள்’ - கொலை செய்யப்பட்டவரின் மனைவி

மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையின் மேலாளரான ஷீலேஷ் கலாதியா (44), தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சக ஊழியரின் குடும்பத்தினருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். இதனிடையே... மேலும் பார்க்க

`சிக்கலில் 3 முக்கிய அமைச்சர்கள்... ஒரே நாளில் வந்த அதிரடி உத்தரவுகள்' - என்ன செய்யப்போகிறது திமுக?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் சூழலில், நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் எடுத்திருக்கும் நடவடிக... மேலும் பார்க்க