Jaishankar : லண்டன் பயணத்தில் பாதுகாப்பு அத்துமீறல்; காலிஸ்தானி குழுக்களுக்கு இந்தியா கண்டனம்!
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இங்கிலாந்துக்கு மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு அத்துமீறலுக்கு, இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
The British almost allowed an attack on EAM Jaishankar.
— Rahul Shivshankar (@RShivshankar) March 6, 2025
Remember the West wants our market but not our security. pic.twitter.com/gB0JcQPsIa
இது குறித்து இணையத்தில் வைரலாகும் வீடியோவில், ஜெய்சங்கர் காரில் அமர்ந்திருக்கும்போது, காலிஸ்தானி ஆதரவாளர்கள் கொடியுடன் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருக்கின்றனர். அப்போது மூவர்ணக் கொடியுடன் ஒருவர் காவலர்களைக் கடந்து கார் அருகே வர, அவரைக் காவலர்கள் வலுக்கட்டாயமாகப் பிடிக்கும் நிலை வந்தது.
ஜனநாயக சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது!
இந்தச் சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளத்தில், "வெளியுறவுத்துறை அமைச்சர் வருகையின்போது பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்ற வீடியோவை நாங்கள் பார்த்தோம். சிறிய பிரிவினைவாத, தீவிரவாதக் குழுவின் தூண்டுதல்களை நாங்கள் கண்டிக்கிறோம்." எனக் கூறியுள்ளார்.

மேலும், " இது போன்ற செயல்பாடுகளால் ஜனநாயக சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்காக வருந்துகிறோம். இது போன்ற சம்பவங்களில் அந்த நாடு (UK) அதன் ராஜாந்திர கடைமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்." என்றும் எழுதியுள்ளார்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம், தீவிர காலிஸ்தான் ஆதரவு குழுவினர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் (Indian High Commission in London) முன்பு போராட்டம் நடத்தியது, 2023ம் ஆண்டு இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
BREAKING: Khalistan supporters in London, U.K., heckled India’s Minister of External Affairs, Dr. Subrahmanyam Jaishankar, and his envoy. A passerby made an obscene gesture toward them.
— Mocha Bezirgan (@BezirganMocha) March 5, 2025
The group accuses the minister and his government of assassinating their members and is… pic.twitter.com/QARU3sJbGI
Jaishankar இங்கிலாந்து பயணம்
காலிஸ்தானி ஆதரவாளர்கள் போராட்டத்துக்கு நடுவில் தனது பயணத்திட்டத்தை சரியாக நிறைவேற்றி வருகிறார் அமைச்சர் ஜெய்சங்கர். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், வெளியுறவு செயளாலர் டேவிட் லம்மி மற்றும் மூத்த தலைவர்களைச் சந்தித்துள்ளார்.
கடந்த செவ்வாய் அன்று உள்துறை செயலாளர் யெவெட் கூப்பரை சந்தித்து மனித கடத்தல் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக இரண்டு நாடுகள் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வது பற்றி உரையாடியுள்ளார்.