3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!
Kalpana: ``நான் உயிரோட இருக்கக் காரணம் என் கணவர்தான்.... வதந்திகளைப் பரப்பாதீர்கள்'' - பாடகி கல்பனா
பிரபல பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர், ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகின. வீட்டில் சுயநினைவின்றி கிடந்த அவரை, அருகில் வீட்டில் குடியிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தாகவும், அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையில் குடும்பப் பிரச்னை என இந்தச் சம்பவத்தைச் சுற்றிலும் வதந்திகள் பலவும் பரவத் தொடங்கின.
இதையெல்லாம் மறுத்த கல்பனாவின் மகள், "என் அம்மா ஒரு பாடகி. அவர் பி.எச்.டியும், எல்.எல்.டியும் படித்து வருகிறார். இதனால் அவருக்கு தூக்கமின்மை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய, டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்து வருகிறார். இந்த மருந்துகள் ஓவர்டோஸ் ஆகியுள்ளது. அவ்வளவு தான். வதந்திகளை பரப்பாதீர்கள்." என்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பெற்று நலமாகியிருக்கும் கல்பனா, தனக்கு நடந்தது குறித்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், "என்னைப்பற்றியும் என் கணவரை பற்றியும் சோசியல் மீடியால ஒரு தவறான வதந்தி பரவி வருகிறது. அதுபற்றி விளக்கம் கொடுப்பதற்காக தான் இந்த பதிவை நான் போட்டு இருக்கேன். நான், இந்த வயசுல பிஎச்டி, எல்எல்பி என நிறைய விஷயங்களை பண்ணிக்கிட்டு இருக்கேன், அதுமட்டுமில்லாமல், என்னுடைய இசை துறையின் மீதும் நான் ரொம்ப நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
இதனால எனக்கு நிறைய மன அழுத்தங்கள் இதனால கடந்த சில ஆண்டுகளாகவே நான் சரியா தூங்கல. தூங்க முடியாதா பிரச்னையால் நான் அவதிப்பட்ட போது , நான் டாக்டரிடம் சென்றேன். அவர், இது இன்ஃபோமேனியா என்று அதற்கு, டாக்டர்கள் சில மருந்துகளை எனக்கு கொடுத்திருந்தார். அந்த மெடிசன்னோட அளவு கொஞ்சம் அதிகமாகி விட்டது. நான் தூங்க எட்டு மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். ஆனால் அது உதவவில்லை. இதனால் நான் மேலும் 10 மாத்திரைகளை உட்கொண்டதால் அது என்னுடைய நுரையீரலை பாதித்து விட்டதால், நான் சுயநினைவை இழந்து விட்டேன்.

ஆனால், நான் இன்னைக்கு உயிரோட திரும்பி வந்து அனைவரிடம் பேசுகிறேன் என்றால், அதற்கு காரணம் என் கணவர் எனக்காக பட்ட பாடு தான். என்னை காப்பாற்றுவதற்காக அவர் பட்ட கஷ்டம் சொல்லவே முடியாது. அதுமட்டுமல்லாமல், மீடியா, போலீஸ் என அனைவரும் கஷ்டப்பட்டு என்ன காப்பாத்தினாங்க இதனால நான் உயிர் தப்பிச்சேன். தயவு செய்து எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். என்னோட வாழ்க்கையில், எனக்கும் என் கணவருக்கோ எந்தவிதமான கருத்து வேறுபாடு இல்லை, எனக்கு ரொம்ப நல்ல கணவர் கிடைச்சிருக்காரு, அழகான நல்ல மகளும் கிடைச்சிருக்காங்க இவங்க என் வாழ்க்கையில எனக்கு கிடைச்சதுக்கு கடவுளுக்கு நான் ரொம்ப நன்றி கடன் பட்டு இருக்கேன், தயவுசெய்து என்னை குறித்தும், என் கணவர் குறித்தும் தவறான வதந்திகளை பரப்பாதீர்கள்." என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
