Kamal Haasan: "கமல் சாரின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கட்டும்" - வாழ்த்திய உதயநிதி
தி.மு.க-வின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மே 28) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதில் தி.மு.க-வின் சார்பில் வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒரு சீட்டில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கமல் ஹாசனுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் 'எக்ஸ்' தளப் பதிவில், “கழக அணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கலைஞானி கமல்ஹாசன் சாருக்கு என் அன்பு வாழ்த்துகள்.
கழக அணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள @maiamofficial தலைவர் கலைஞானி @ikamalhaasan சாருக்கு என் அன்பு வாழ்த்துகள்.
— Udhay (@Udhaystalin) May 28, 2025
இத்தேர்தலில் வென்று, தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், இந்திய அரசியலமைப்பை - பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், கமல் சாரின் குரல் மாநிலங்களைவையில் ஓங்கி…
இத்தேர்தலில் வென்று, தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், இந்திய அரசியலமைப்பை - பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும், கமல் சாரின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கப்போவதை எண்ணி மகிழ்கிறோம்” என்று வாழ்த்தி இருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY