செய்திகள் :

Kharge: 'ஜி.எஸ்.டி வரி மக்களின் சேமிப்பை குறைத்துள்ளது...' - கார்கே கூறும் 7 பொருளாதார காரணிகள்!

post image

இந்திய பொருளாதார நிலை குறித்து 7 காரணிகளைக் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...

``மோடி அரசு, அது உருவாக்கியுள்ள நிதி நெருக்கடியை சரிசெய்ய எந்த தீர்வையும் கொண்டிருக்கவில்லை.

தங்கம் மீதான கடன்கள் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தங்கம் மீதான கடன்களை வாங்கிக்கொண்டு, அதை திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

சாதாரண மக்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் பெறும் சேவைகளின் மொத்த அளவு கடந்த 8 காலாண்டுகளில் மிகவும் குறைந்துள்ளது. கொரோனாவிற்கு முன்பு மக்களுக்கு இருந்த வாங்கும் சக்தியை, அதன் பிறகு மீண்டும் நாம் எட்டவில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளில், கடந்த ஆண்டு கார் விற்பனை மிகவும் குறைந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் (2019 - 2023), இன்ஜினீயரிங், உற்பத்தி, பிராசஸ், உள்கட்டமைப்பு துறைகளில் சம்பளம் கூட்டு வருடாந்திர விகிதமாக வெறும் 0.8 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த 8 காலாண்டுகளில், உணவு பணவீக்கம் 7.1 சதவிகிதமாக உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மீது ஜி.எஸ்.டி மூலம் விதிக்கப்படும் மறைமுக வரியால், மக்களின் சேமிப்பு கடந்த 50 ஆண்டுகாலத்திற்கு இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

வீடுகளில் ஆகும் செலவுகள் தற்போது 6.4 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுதான் பெரிய உச்சம் ஆகும்.

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் வெளிநாட்டு நிதிகள் இந்தியாவை விட்டு போகும் மற்றும் பல லட்சம் கோடி அளவுக்கு சிறு முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும்.

இந்த ஏழு காரணிகளும் சாதாரண இந்தியனின் வாழ்க்கை எப்படி கலைக்கப்பட்டுள்ளது என்பதை விளக்குகிறது.

நரேந்திரமோடி ஜி,

ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கையை அழிப்பது தவிர, உங்களது புத்தாண்டு ரெசல்யூசன் வேறாக இருக்காது" என்று பதிவிட்டுள்ளார்.

Indian Rupee: இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு 5 காரணங்கள்... RBI காரணமா?!

கடந்த சில நாட்களாகவே, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயில் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 'இப்படியே சென்றால், இது இந்திய பொருளாதாரத்திற்கு நல்லதல்ல' என்று கடும் எச்சரிக்கைகளை... மேலும் பார்க்க

Zoho: ``5% பேர் இப்படி இருந்தால் போதும்... பொருளாதார வளர்ச்சி கூடும்'' -ஶ்ரீதர் வேம்பு சொல்வதென்ன?

'இது என்னுடைய நாடு. ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்' என்று நினைத்து, இளைஞர்கள் பணிசெய்ய வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கூறியிருந்தது இந்தியா முழுவதிலும் பரபரப்பை க... மேலும் பார்க்க

Rupee vs Dollar: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஏன்? - RBI எப்படி சரிசெய்யும்?

அமெரிக்க டாலருக்கு இணையான இந்தியா ரூபாயின் மதிப்பு பெரும் சரிவைச் சந்திந்துள்ளது. கடந்த புதன் கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.94 ஆக இருந்த நிலையில், நேற்று 14 காசுகள் குற... மேலும் பார்க்க