"எளியவர்களுக்கு உணவு எட்டாக்கனியாகக் கூடாது" - தாயின் பெயரில் அன்னதான விருந்து த...
Kiss: ``ரூ.7,000 தராங்களாம், வேணாம் ரூ.10,000 கேட்டுப்பாரு" - மிர்ச்சி விஜய் கலகல பேச்சு
சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.
லிஃப்ட் படத்தில் தொடங்கி டாடா வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது.
டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, மிர்ச்சி விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அதில் பேசிய நடிகர் மிர்ச்சி விஜய், ``படங்களில் நடிப்பதே மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இந்தப் படத்தில் நடித்ததும், இந்தப் படக்குழுவுடன் நடித்ததும் மிகவும் அற்புதமான, வித்தியாசமான அனுபவம்.
ஹீரோவுக்கு நண்பனாக நடிப்பது என்பதைத் தாண்டி, அந்த நடிகருக்கு உண்மையிலேயே நாம் நண்பராக இருந்தால், அது இன்னும் சிறப்பான அனுபவமாக இருக்கும்.
நானும் கவினும் சேர்ந்து ஈவென்ட் செய்வதிலிருந்தே நண்பர்கள். 'ரூ.7,000 தராங்களாம்... வேணாம் ரூ10,000 கேட்டுப்பாரு' எனப் பேசத் தொடங்கி, நான் இலங்கைக்கு ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றபோது, அங்கு கவினின் படப் போஸ்டரைப் பார்த்து அவருக்கு செல்போனில் அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டது வரை எங்களின் நட்பு தொடர்கிறது.
இருவரும் சேர்ந்து ஒரு படத்துக்கு பாடல் எழுதி பாடியிருக்கிறோம். இப்போது அவருடன் சேர்ந்து வேலை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி.
முதலில் கவினுக்கு நன்றியும், இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகளும். இயக்குநர் சதீஷுக்கும் நன்றி. இங்கு குறிப்பாகச் சொல்ல வேண்டியவர்களில் ஒருவர் எடிட்டர்.
அவரை முதன்முதலில் பார்த்தபோது, பாம்பேயிலிருந்து காஸ்ட்யூம் டிசைனர் யாரையோ அழைத்து வந்திருக்கிறார்கள் போல என்றுதான் நினைத்தேன்.
கவினை விட அதிகமாக காஸ்டியூம் மாற்றுபவர் அவர்தான். அவரைப் பார்த்ததும் கலர் கலர் சட்டை, சென்ட் வாசம் தூக்குது, பயங்கர ஸ்மார்ட்டா இருக்காரு யாரு இவர்னு இயக்குநரிடம் கேட்டேன்.
இவர்தான் இந்தப் படத்தின் எடிட்டர்னு சொன்னாங்க. கண்டிப்பா இவரும் நடிகராக வருவார்னு நம்புறேன். இந்தப் படத்துல என்னுடைய அப்பா விடிவி கணேஷ் சார்.
இன்னும் அவர்கூட 4 நாள் நடிச்சிருந்தாலும் சந்தோஷமா இருந்திருக்கும். இசையமைப்பாளர் ஜென் மாஸ்டரும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார். இந்தப் படத்துக்கு உங்களின் சப்போர்ட் ரொம்ப முக்கியம்." எனப் பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...