செய்திகள் :

LIC-ன்‌ ரூ.32,000 கோடி அதானி குழுமத்தில் முதலீடு செய்ய முயற்சியா?- எல்.ஐ.சி நிறுவனத்தின் பதில் என்ன?

post image

அமெரிக்காவை சேர்ந்த செய்தி நிறுவனமான 'தி வாஷிங்டன் போஸ்ட்' சமீபத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

குற்றச்சாட்டு

அதாவது, இந்திய அதிகாரிகள் எல்.ஐ.சி நிறுவனத்தின் கிட்டத்தட்ட ரூ.32,000 கோடி முதலீடுகளை அதானி நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான பரிந்துரையை முன்னெடுத்தனர்... அதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர் என்கிற குற்றச்சாட்டை வைத்தது.

அதானி
அதானி

அறிக்கை

இதற்கு பதிலளித்து எல்.ஐ.சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "தி வாஷிங்டன் போஸ்ட் முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் அடிப்படையற்றது ஆகும்.

அது கூறுகின்ற மாதிரி எல்.ஐ.சி முதலீடுகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்வதற்கான எந்தவொரு ஆவணங்களையும், திட்டத்தையும் எல்.ஐ.சி நிறுவனம் வகுக்கவில்லை.

நிதி அமைச்சகமோ, வேறு எந்தத் துறையோ இந்த முடிவுகளில் தலையிடாது.

எல்.ஐ.சி நிறுவனம் தனது அனைத்து கொள்கைகளையும், முதலீட்டு முடிவுகளையும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டே வகுக்கும்... மேலும் அதில் பங்குதாரர்களின் நலனும் உள்ளடக்கியிருக்கும்.

இந்தக் குறிப்பிட்ட கட்டுரை எல்.ஐ.சி நிறுவனத்தின் பெயரையும், புகழையும் கெடுப்பதாக உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

'உயர்கல்வியை வணிகமயமாக்கும் மசோதாவை திரும்பப் பெறவேண்டும்' - தமிழ்நாடு அரசுக்கு திருமா அறிக்கை

தமிழ்நாடு அரசின் 'தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா'வை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்..."உயர்கல்வியை முற்றிலும் வணிகமயமாக்குவ... மேலும் பார்க்க

'எதற்கு முதல்வர் ஆனோம்? என்பதையே மறந்து, முழுநேர சினிமா விமர்சகராக மாறி..'- ஸ்டாலினை சாடும் பழனிசாமி

தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் செய்வது குறித்து விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி."நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடி... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் நெல் கொள்முதலில் தாமதமா? - விமர்சனங்களுக்கு தமிழ்நாடு அரசு பதில்

தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் குறித்து தொடர்ந்து பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், "நெல் கொள்முதல் பணிகளை முந்த... மேலும் பார்க்க

``டிடிவி தினகரன் Expiry Date முடிந்த அரசியல்வாதி" - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து பாசனத்திற்காக அணையிலிருந்து 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள... மேலும் பார்க்க

Pallikaranai ஊழல்: Stalin சொன்னது வேறு நடப்பது வேறு | ஆதாரங்களை அடுக்கும் அறப்போர் ஜெயராமன்

பாதுகாக்கப்பட்ட நிலமாகக் கருதப்படும் ‘ராம்சார் குறியீடு’ பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தமிழ்நாடு அரசு முறைகேடாக அனுமதி வழங்கியுள்ளது என்றும் இதல் பல கோடி ரூபாய் ... மேலும் பார்க்க