செய்திகள் :

Live: புயல் பாதிப்பு: திண்டிவனம்: நிரம்பி வழியும் கிடங்கள் ஏரி - வீடியோ

post image

நிரம்பிய சித்தேரி...

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு கிராமத்தில் சித்தேரி ஏரி நிரம்பி வழிகிறது.

நிரம்பி வழியும் கிடங்கள் ஏரி!

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கிடங்கள் ஏரி நிரம்பி வழிகிறது .

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு:

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் (30.11.2024) கரையைக் கடந்தும் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை எதிர்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், புயல் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுவரும் முதல்வர் ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின்

அப்போது, ``விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை கண்டிராத மழை பெய்திருக்கிறது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 900 மின் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் வடிந்த பகுதிகளில் உடனுக்குடன் மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மழை முழுமையாக நின்றதற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்டு இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.

உயிரிழந்தோர் குடும்பங்கள், கால்நடைகள், சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளைப் பார்வையிட மத்திய அரசு, மத்தியக் குழுவை அனுப்புவதோடு, பாதிப்புக்கு ஏற்ற நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைப்போம். நிவாரண நிதி தர வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. ஆனால் ஒவ்வொரு முறையும் அதைச் செய்ய மறுக்கிறார்கள்" என்றார்.

Rain Alert: 'இன்று இரவு முதல் கனமழை' - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை? வானிலை மையம் சொல்வதென்ன?

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, உள்ளி... மேலும் பார்க்க

Fengal: ஊட்டி வரை எதிரொலித்த ஃபெஞ்சலின் தாக்கம் - மலை ரயில் ரத்து; கடும் பனி மூட்டம்; தொடரும்‌ மழை

புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயலின் தாக்கம் நீலகிரி மாவட்டம் எதிரொலித்து வருகிறது. நேற்று முன்தினம் முதலே நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில... மேலும் பார்க்க

Rain Alert : இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை... எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?!

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகும், தமிழ்நாட்டில் மழை இன்னும் விட்டபாடில்லை.நேற்று வானிலை மையம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திரு... மேலும் பார்க்க

Fengal Cyclone: கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மழை; புதுச்சேரியைப் புரட்டிய புயல் | பாதிப்பு வீடியோக்கள்

புதுச்சேரி கிருஷ்ணா நகர் பகுதியில் பொதுமக்களை ராணுவத்தினர் மீட்டு படகில் கொண்டு செல்கின்றனர்ஃபெஞ்சல் புயல் கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.ஃபெஞ்சல் புயல் கன மழையால் சாலைகளில் வெள்... மேலும் பார்க்க

Fengal Cyclone: கரையைக் கடந்து புதுச்சேரியில் நிலைகொண்ட புயல்; 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்றிரவு 11:30 மணியளவில் கரையைக் கடந்தது. இந்த நிலையில், கரையைக் கடந்த புயல் தற்போது புதுச்சேரியில் நிலைகொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்... மேலும் பார்க்க