செய்திகள் :

Lokesh Kanagaraj: "லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ படம்"- ஆமீர் கான் கொடுத்த அப்டேட்

post image

ஆமீர் கான் நடித்திருக்கும் 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் இம்மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

ரிலீஸையொட்டி படத்தைப் புரொமோட் செய்ய பிஸியாக இயங்கி வருகிறார் ஆமீர் கான்.

Coolie - Lokesh Kanagaraj
Coolie - Lokesh Kanagaraj

இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் ஆமீர் கானுடன் இருக்கும் புகைப்படத்தைத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அப்போதிருந்து ஆமீர் கான் 'கூலி' படத்தில் கேமியோ செய்திருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பும் ஒருபுறம் எழுந்திருக்கிறது.

'சித்தாரே ஜமீன் பர்' படத்திற்காக அளித்த சமீபத்திய பேட்டியில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் தொடர்பாக அவர் பேசியிருக்கிறார்.

அவர், "லோகேஷும் நானும் இணைந்து ஒரு திரைப்படம் செய்யவிருக்கிறோம். அது ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம்.

ஆக்ஷன் படமாகப் பெரிய ஸ்கேலில் படம் உருவாகவிருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் நான் நடிக்கும் திரைப்படம் 2026-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கும்.

Sitaare Zameen Par | ஆமீர் கான்
ஆமீர் கான்

நாங்கள் இருவரும் அப்படத்தை ஒப்பந்தம் செய்துவிட்டோம். இவ்வளவுதான் இப்போது அந்தத் திரைப்படம் பற்றிப் பேச முடியும்," எனக் கூறியிருக்கிறார்.

'கூலி' படத்தின் ரிலீஸுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் 'கைதி 2' படத்தை எடுக்கவிருக்கிறார். சமீபத்திய பேட்டிகளிலும் இதை அவரே அறிவித்திருந்தார்.

'சித்தாரே ஜமீன் பர்' படத்தைத் தாண்டி, பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் 'லாஹூர் 1947' படத்தில் நடித்திருக்கிறார் ஆமீர் கான். இப்படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

What to watch on Theatres: `தக் லைஃப்', `மெட்ராஸ் மேட்னி' - இந்த வார படங்கள் லிஸ்ட்!

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படங்களின் பட்டியல்.தக் லைஃப் (தமிழ்):மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் உள்ளிட்ட நட்சத்... மேலும் பார்க்க

சிவாஜி கணேசன் பேரன் திருமணம்... காதலியைக் கரம் பிடிக்கிறார் தர்ஷன் ராம்குமார் கணேசன்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் தர்ஷன் ராம்குமார் கணேசன் திருமணம் நாளை சென்னையில் நடக்கிறது. திருமணத்தையொட்டிய சங்கீத் நிகழ்ச்சி இன்று நடைபெறவிருக்கிறது.மறைந்த நடிகர் சிவாஜி... மேலும் பார்க்க

What to watch on OTT: `டூரிஸ்ட் ஃபேமிலி', `லால் சலாம்' - இந்த வாரம் ஓ.டி.டி-யில் என்ன ரிலீஸ்?

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான பிறகு ஓடிடி தளங்களில் வெளியான திரைப்படங்களின் பட்டியல் - (OTT Release after Theatre Release)டூரிஸ்ட் ஃபேமிலி (தமிழ்)அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிக... மேலும் பார்க்க

Ilaiyaraja: "கோவையில் என் காலடி படாத இடமே கிடையாது" - பகிர்கிறார் இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜாவின் கான்சர்ட் நாளை கோவையில் நடக்கவிருக்கிறது. அதற்காக கோவைக்கு விரைந்திருக்கிறார் இளையராஜா. இன்றைய தினம் கோவையில் ரோட்டரி கிளப் நடத்தும் விருது விழா நடைபெற்றது. இளையராஜாஇந்த நிக... மேலும் பார்க்க

Krishna: நடிகர் கிருஷ்ணாவுக்குத் திருமணம் - வாழ்த்தும் பிரபலங்கள்!

நடிகர் 'கழுகு' கிருஷ்ணா நடிப்பில் கடந்த ஆண்டு 'பாராசூட்' வெப் சீரிஸ் வெளியாகியிருந்தது. இதைத்தாண்டி, கெளதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த 'ஜோஸுவா' திரைப்படமும் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது. இதை... மேலும் பார்க்க