செய்திகள் :

Lokesh Kanagaraj: `LCU உருவானது பற்றி 10 நிமிட குறும்படம் - லோகேஷ் கொடுத்த அப்டேட்!

post image
லோகேஷ் கனகராஜின் கைதி திரைப்படம் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவாகியிருக்கிறது.

இன்று அவருக்கு மிகப்பெரிய பிராண்டாக உருவாகியுள்ள `எல்.சி.யு' என்பதற்கு தொடக்கப்புள்ளி `கைதி' திரைப்படம்தான். அத்திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் `எல்.சி.யு' ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார் லோகேஷ்.

`லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' எனப்படும் `எல்.சி.யு' எப்படி உருவானது என்பது தொடர்பாக ஒரு குறும்படம் எடுத்திருப்பதாக அவர் வழங்கிய `ஃபைட் கிளப்' திரைப்படத்தின் ப்ரோமோஷன் நேரத்தில் கூறியிருந்தார். அதன் பிறகு அந்த குறும்படம் தொடர்பாக எந்த சத்தமும் வெளிவரவில்லை. தற்போது அந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார் லோகேஷ்.

LCU Short Film

10 நிமிட கால அளவிலான இந்த குறும்படம் `எல்.சி.யு'-வின் முன்னுரை குறித்து எடுத்துரைக்குமாம். இந்த குறும்படத்திற்கு `சாப்டர் ஜிரோ (Chapter Zero )' என பெயரிட்டிருக்கிறார்கள். லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் கதாபாத்திரங்கள் உருவானது குறித்தும், அதன் மேல் எழுந்த சந்தேகங்களுக்கெல்லாம் இந்த குறும்படம் விளக்கமளிக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

TVK: `சைக்கிள் மூலமா மாநாடு நடக்குற திடலுக்குப் போறோம்'- நடிகர் சௌந்தர ராஜன்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறவிருக்கிறது.தமிழக முழுவதுமிருந்து தொண்டர்கள் வி.சாலையை நோக்கிப் புறப்பட ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகரான சௌந்தர ராஜன் தன்னுட... மேலும் பார்க்க

TVK: `தீப்பந்தம் எடுத்துத் தீண்டாமை கொளுத்து' - கபிலனின் வரிகளில் உருவமெடுத்த விஜய்யின் அரசியல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடுக்கான ஏற்பாடு பணிகள் தீவிரமடைந்திருக்கின்றன. நாளை கட்சியின் முதல் மாநாடு நடக்கவிருக்கிறது.கடந்த பிப்ரவரி மாதம் கட்சி குறித்தான அறிவிப்பை வெளியிட்டு நடிகர் விஜய் , ... மேலும் பார்க்க

Good Bad Ugly: மாஸ்டர் படத்திற்குப் பிறகு அஜித் சார் சொன்னார் - `குட் பேட் அக்லி'-யில் அர்ஜுன் தாஸ்

அஜித் நடிக்கும் `குட் பேட் அக்லி' திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் பிரசன்னாவும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க... மேலும் பார்க்க

"நான் ரகசிய கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு உண்மையான காரணம் இதுதான்" - நடிகை தேவயானியின் பர்சனல்ஸ்

தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவைதைகளா கோலோச்சிய அந்த நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகி... மேலும் பார்க்க

Vijay TVK: 2G, Time To Lead, விவசாயப் பிரச்னை - விஜய்க்கு அரசியல் இமேஜ் கொடுத்த 5 படங்கள்

'நாளைய தீர்ப்பு' படத்தில் கதாநாயகனாக ஆரம்பித்த பயணம் லவ்வர் பாய், ஆக்ஷன் ஹீரோ, வசூல் நாயகன், இளைய தளபதி , தளபதி என அடுத்தடுத்த கட்டங்களை எட்டி இப்போது கட்சித் தலைவர் என்ற நிலையை எட்டி இருக்கிறார் விஜய... மேலும் பார்க்க