செய்திகள் :

Maharashtra: முதல்வர் பதவி விவகாரம்: "பிரதமரின் முடிவை ஏற்பேன்" - சரணடைந்த ஷிண்டே; பாஜக திட்டமென்ன?

post image

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றும் ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க ஏக்நாத் ஷிண்டே தயக்கம் காட்டி வருகிறார். தற்போது தனது நிலையிலிருந்து ஏக்நாத் ஷிண்டே இறங்கி வந்துவிட்டதாகச் செய்திகள் கூறுகின்றன.

ஆட்சியமைப்பதற்கான வேலையில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்க இருக்கிறார். இப்போது எந்த கட்சிக்கு எத்தனை அமைச்சர் பதவி, எந்தெந்த இலாகா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏக்நாத் ஷிண்டே தனது நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வந்துவிட்டார் என்பதை நிரூபிக்கும் விதமாக அவரது பேச்சு அமைந்திருக்கிறது.

இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "முதல்வர் பதவி விவகாரத்தில் நான் தடையாக இருக்கமாட்டேன் என்று பிரதமரிடம், அமித் ஷாவிடமும் தெரிவித்துவிட்டேன். இவ்விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரத்தைப் பிரதமரிடம் விட்டுவிட்டேன். பா.ஜ.க என்ன முடிவு எடுத்தாலும், அதனை ஏற்றுக்கொள்வோம். தடைக்கல்லாக இருக்கமாட்டேன். நான் சாதாரண மனிதன். முதல்வரானதிலிருந்து ஒரு நாள் கூட விடுமுறை எடுத்துக்கொண்டதில்லை. நான் அழக்கூடியவன் கிடையாது. போராடக்கூடியவன். எனது இறுதி மூச்சுவரை மகாராஷ்டிராவிற்காகப் பாடுபடுவேன்'' என்று குறிப்பிட்டார். தானேயில் உள்ள தனது வீட்டில் ஏக்நாத் ஷிண்டே பேட்டியளித்தார்.

ஏக்நாத் ஷிண்டே தனது நிலையிலிருந்து இறங்கி வந்திருப்பதால் ஓரிரு நாளில் புதிய அரசு பதவியேற்கும் என்று கூறப்படுகிறது. வரும் 2ஆம் தேதி புதிய அரசு பதவியேற்கலாம் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தலைவர்கள் பீகார் மாடலை பின்பற்றி ஏக்நாத் ஷிண்டேயிக்கு மீண்டும் முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று கூறி வந்தனர். அதோடு ஏக்நாத் ஷிண்டேயிக்கு முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று கோரி, ஏக்நாத் ஷிண்டே வீட்டின் முன்பு சிவசேனா தொண்டர்கள் கூடினர். அவர்களிடம் தனது வீட்டு முன்பு திரள வேண்டாம் என்று ஷிண்டே கேட்டுக்கொண்டார்.

இது குறித்து சிவசேனா தலைவர் ஒருவர் கூறுகையில், ''அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியால் நாங்கள் பா.ஜ.கவிடம் அதிக கறாராகப் பேசமுடியாமல் போய்விட்டது. அஜித்பவார் கட்சி இந்த அளவுக்கு வெற்றி பெறாமல் போய் இருந்தால் எங்களது கை ஓங்கி இருக்கும்" என்று தெரிவித்தார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/VaigainathiNaagarigam

விஸ்வகர்மா திட்டம்: "தற்போதைய வடிவில் செயல்படுத்த இயலாது; ஆனால்.." - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்

`மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டமானது சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதால் தற்போதைய வடிவில் அதைச் செயல்படுத்த முடியாது' என மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துற... மேலும் பார்க்க

Rain Alert: Cyclone Fengal தாக்கம் எப்படியிருக்கும்? | Modi | Rahul Gandhi | Imperfect Show

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/TATAStoryepi01 மேலும் பார்க்க

Maharastra: 'பிரதமரின் முடிவே இறுதி!' - முதல்வர் பதவி குறித்து ஏக்நாத் ஷிண்டே சொல்வதென்ன?

மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவி குறித்து பாஜக மேலிடம்தான் இறுதி முடிவு எடுக்கும் என்று சிவசேனா தலைவரும் இடைக்கால முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ... மேலும் பார்க்க

'கலைஞரை வாதத்தில் வென்ற உதயநிதி' - வைரமுத்து பகிர்ந்த வாழ்த்து!

திமுக இளைஞரணித் தலைவரும் தமிழகத்தின் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.கட்சித் தொண்டர்கள் பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடிவரும் நிலையில், அரசியல் தலைவர்களும் அவருக்கு வா... மேலும் பார்க்க

ராமதாஸ் விவகாரம்: `அவர் மட்டும் முதல்வரை அப்படி பேசலாமா... அது சரியா?' - எம்.பி திருச்சி சிவா கேள்வி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சிகள், அதானி விவகாரத்தை கையில் எடுத்தன. இதனால் நேற்று இரு அவைகளும் முடங்கியது. தொடர்ந்து இன்றும் இரு அவைகளிலும... மேலும் பார்க்க

``ஆடிட்ல என்ன சொல்லப்போறாங்கன்னு...'' - சி.ஏ.ஜியின் நிகழ்ச்சியில் அப்பாவு

அக்கவுன்டன்ட் ஜெனரல் எனப்படும் இந்திய கணக்குத் தணிக்கைத் துறை ஆண்டுதோறும் நவம்பர் மூன்றாவது வாரத்தில் கொண்டாடும் ’தணிக்கை வார’ விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் எம்.அப்பாவு... மேலும் பார்க்க