Mammootty: மம்மூட்டிக்கு புற்றுநோய் பாதிப்பா? - என்ன சொல்கிறார் மம்மூட்டியின் செய்தி தொடர்பாளர் ?
மம்மூட்டி நடித்திருக்கும் `பசூக்கா' திரைப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதனை தாண்டி தன்னுடைய அடுத்தடுத்த படங்களையும் கமிட் செய்து வைத்திருக்கிறார். இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் தன்னுடைய கமிட்மென்ட்களிலிருந்து விலகி ஓய்வெடுத்து வருவதாகவும் சமூக வலைதளப் பக்கங்களில் தகவல்கள் பரவி வந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து மம்மூட்டியின் செய்தி தொடர்பாளர் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மம்மூட்டியின் செய்தி தொடர்பாளர், `` இது பொய்யான செய்தி. அவர் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு இருப்பதால்தான் விடுப்பு எடுத்திருக்கிறார். அதனால்தான் படப்பிடிப்புகளிலிருந்து ஒரு இடைவெளியும் எடுத்திருக்கிறார். இந்த இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவிருக்கிறார்." எனக் கூறி பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு இலங்கையில் தொடங்கியது. 15 வருட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியும் மோகன் லாலும் இப்படத்தில் சேர்ந்து நடிக்கிறார்கள். மலையாள சினிமாவின் இந்த மூத்த நடிகர்கள் கடைசியாக `கடல் கடனு ஒரு மாத்துக்குட்டி' என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks