பாலியல் குற்றங்களின் மையமாகும் ஹம்பி! வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
Neeraj Madhav: ``ஜவான் பட வாய்ப்பை நிராகரித்ததற்கு காரணம்; இது ஆணவமாக தெரியலாம்!'' - நீரஜ் மாதவ்
`RDX' `ஒரு வடக்கன் செல்ஃபி' போன்ற மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நீரஜ் மாதவ். தமிழில் சிம்புவின் `வெந்து தணிந்தது காடு' திரைப்படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுமட்டுமல்ல, `தி பேமிலி மேன்' வெப் சீரிஸிலும் இவர் நடித்திருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்லீ இயக்கத்தில் வெளியான `ஜவான்' திரைப்படத்தில் நடிக்க வேண்டியது எனவும் அந்த வாய்ப்பை அவர் ஏற்கவில்லை என்றும் பேசியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் நீரஜ் மாதவ், `` ஜவான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு என்னை அழைத்தார்கள். ஆனால், அதில் தனித்துவமாக எந்தவொரு செயலையும் நிகழ்த்துவதற்கு இல்லை. அதனால்தான் அத்திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை.
`தி பேமிலி மேன்' தொடருக்குப் பிறகு எனக்கு வெவ்வேறு சினிமா துறைகளிலிருந்து வாய்ப்புகள் வருகிறது. அந்த வரிசையில் தெலுங்கு திரைப்படத்திற்கான வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. ஆனால் நான் அந்த வாய்ப்புகள் எதையும் ஏற்கவில்லை. ஏனென்றால் நான் இன்னும் அந்த மொழியைக்கூட கற்கவில்லை." என்றவர் இவருடைய பார்வை குறித்தும் விளக்கினார்.
அவர், ``பலருக்கு என்னுடைய இந்த முடிவு ஆணவமாக தெரியும். ஆனால், எனக்கு மற்ற மொழி திரைப்படங்களில் நடிப்பதில் பெரிதளவில் ஆர்வமில்லை. பாலிவுட்டில் எப்போதும் தென்னிந்திய நடிகர்களுக்கு துணை கதாபாத்திரங்கள்தான் கிடைக்கும். பாலிவுட் படத்தின் கதைகள் தென்னிந்தியவைச் சேர்ந்த ஒருத்தரை மையப்படுத்தியதாக இருந்தால் மட்டுமே முன்னணி கதாபாத்திரங்கள் தென்னிந்திய நடிகர்கள் நடிக்க முடியும்." எனப் பேசியிருக்கிறார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks