எல்ஐசி வலைதளத்தின் முதன்மை மொழி மாற்றம்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
Manipur: `பிடிவாதத்தை கைவிட்டு மோடி மணிப்பூர் செல்ல வேண்டும்" - ப. சிதம்பரம் சொல்வதென்ன?
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்திருக்கிறது.
இம்பால் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள சில எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. வாகனங்கள் எல்லாம் எரிக்கப்பட்டிருக்கிறது. வன்முறையைக் கட்டுப்படுத்தக் காவல்துறை கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தி இருக்கின்றனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் சிலர் காயமடைந்திருக்கின்றனர். மீண்டும் மணிப்பூர் கலவரப் பூமியாக மாறி இருக்கிறது.
மத்திய அரசு ராணுவத்தினரை மணிப்பூருக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்நிலையில் பிடிவாதத்தைக் கைவிட்டு பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல வேண்டும் என்று ப. சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருக்கிறது. அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், " பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல வேண்டும்.
மணிப்பூர் மக்களிடம் உரையாடி, அவர்களின் குறை, விருப்பங்களை கேட்டறிய வேண்டும். 5,000 துணை ராணுவத்தினரை அனுப்புவது மணிப்பூர் நெருக்கடிக்கு தீர்வாகாது. நெருக்கடிக்கு முதல்வர் பிரேன் சிங்தான் காரணம் என்பதை ஒப்புக்கொண்டு அவரை நீக்கவேண்டும்" என்று ப. சிதம்பரம் பதிவிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...