செய்திகள் :

Montha Cyclone: இன்று கரையைக் கடக்கும் புயல்; 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை; எங்கெல்லாம் ஆரஞ்சு அலெர்ட் | Live

post image

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

இதில், அக்டோபர் 24-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி 25-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகி 26-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது.

இது நேற்று (அக்டோபர் 27) காலை 11:30 மணியளவில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக நிலைகொண்டது.

`மோன்தா' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் புயல் இன்று (அக்டோபர் 28) காலை தீவிர புயலாக வலுப்பெற்று மாலை முதல் இரவுக்குள் ஆந்திராவின் காக்கிநாடாவுக்கு அருகில் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை

மேலும், தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழையும் மற்றும் சென்னை, ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் எண்ணுரில் அதிகபட்சமாக 12 செ.மீ மழை பெய்திருக்கிறது.

இந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின்படி, ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் குறிப்பிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளுர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மறுபக்கம், கனமழை எதிரொலியாக ஆந்திராவின் 3 நகரங்களிலிருந்து சென்னைக்கு வரவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஆந்திர கடலோரப் பகுதி வழியே செல்லும் பல ரயில்கள் தாமதமாகப் புறப்படும் என்று ரயில்வே துறை அறிவித்திருக்கிறது.

இன்று தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை?; திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்கிற அறிக்கையை வெளியிட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் மழை?அதன் படி, இன்று காலை 10 மணி வரை, தமிழ்நாட்டில் தருமபுரி, கள்... மேலும் பார்க்க

Rain Updates: தமிழ்நாட்டில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வானிலை எப்படி இருக்கும்? வானிலை மையம் தகவல்

பெரும்பாலும் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் நவம்பர் மாதத்தின் இறுதியிலும், டிசம்பர் மாதத்திலும் மழை அதிகமாக இருக்கும். இதனால், ஒவ்வொரு ஆண்டுமே தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த இரு மாத மழை குறித்த சின்ன... மேலும் பார்க்க

மெலிசா: `நூற்றாண்டின் புயல்’ 174 ஆண்டுகளுக்குபின் ஜமைக்காவை தாக்கிய கடும் புயல்; அதிர்ச்சி காட்சிகள்

ஜமைக்கா நாட்டில் நேற்று கடுமையான சூறாவளி புயல் வீசியது. இந்தப் புயலுக்கு பெயர் மெலிசா. ஜமைக்கா நாட்டில் கடந்த 174 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்தப் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பு... மேலும் பார்க்க

சென்னை: `உங்கள் பகுதியில் மழை நீர் தேங்கியிருக்கிறதா?' போட்டோ எடுத்து விகடனுக்கு அனுப்புங்க

வடகிழக்குப் பருவமழை, மோன்தா புயல் என சென்னையில் கடந்த சில தினங்களாக தினமும் காலையில் மழை அட்டென்டன்ஸைப் போட்டுவிடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும், வேலைக்குச் செல்வோருக்கும் பெரும... மேலும் பார்க்க

'மோன்தா' புயல் உருவாகியது; சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்; வேறு எந்த மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்?

'மோன்தா' புயல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை வழங்கியுள்ளது இந்திய வானிலை மையம்.அதன் படி, வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று மோன்தா புயலாக மாறியுள்ளது.இந்தப் புயல் த... மேலும் பார்க்க