செய்திகள் :

Mookuthi Amman 2: `தயங்கி தயங்கிதான் சொன்னேன்; என்னுடைய கரியர்லேயே மிகப்பெரிய படம் இது' - சுந்தர்.சி

post image

`மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவிருக்கிறது.

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் நடிக்கவிருக்கிறார். இவரை தாண்டி மீனா, ரெஜினா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.

மூக்குத்தி அம்மன் பூஜை ஸ்டில்ஸ்

இப்படத்திற்கு இன்று சென்னை பிரசாத் ஸ்டுடியோஸில் பூஜை போடப்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து படத்தினுடைய முதல் ஷாட்டையும் சுந்தர். சி இங்கு எடுத்திருக்கிறார்.

இந்த நிகழ்வில் பேசிய சுந்தர்.சி, ``இந்த படம் ஐசரி.கே. கணேஷ் சாரோட விஷன். இயக்குநராக, எழுத்தாளராக எங்களுக்கு பல விஷயங்கள் தோணும். அதையெல்லாம் நடத்தி காட்டுறதுக்கு பின்னாடி இருந்து ஒரு சக்தி வேணும். அப்படியான சக்தியாகதான் எங்களுக்கு ஐசரி சார் கிடைச்சாரு. இந்தப் படத்தினுடைய ஸ்கிரிப்ட் அமைஞ்சதும் அது மிகப்பெரிய படமாக வந்துடுச்சு. இதுவரைக்கும் என்னுடைய கரியர்ல நான் பண்ற மிகப்பெரிய படம் இதுதான். இந்தியாவின் மிகப்பெரிய படங்களில் இது ஒன்றாக அமையும்.

சுந்தர்.சி

படத்தினுடைய பட்ஜெட் பற்றிய விஷயத்தை தயங்கி தயங்கிதான் பேசுனேன். அவர் எங்களைவிட இருமடங்கு உற்சாகமாகி படத்தினுடைய வேலைகளை கவனிக்க தொடங்கிட்டாரு. இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை பார்த்தாலே எந்தளவுக்கு அவர் உற்சாகமாக இருக்கார்னு தெரிஞ்சிடும். இந்தப் படத்துக்கு முதல்ல யாரையெல்லாம் யோசிச்சேனோ, அவங்களெல்லாம் இந்தப் படத்துல இணைஞ்சிருக்காங்க." என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``இது என் மனைவி முதல் முறையாக வாங்கிக் கொடுத்தது!'' - மாணவனின் கேள்விக்கு யுகபாரதியின் பதில்!

பாடலாசிரியர் யுகபாராதியின் `மஹா பிடாரி' புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவின் காணொளிகள் ஒவ்வொன்றாக சினிமா விகடன் யூட்யூப் தளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. த... மேலும் பார்க்க

Ilaiyaraaja: `` `யாழ் செய்தது நீங்கள் தானே, என்னருகில் நில்லுங்கள்' என்றார் இளையராஜா!"- தருண் சேகர்

லண்டனில் வருகிற 8-ம் தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜா நடத்தவிருக்கிறார். இதற்காக இசைஞானி இளையராஜாவை பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வ... மேலும் பார்க்க

SPB: ’கேளடி கண்மணி’ படத்தில் எஸ்பிபி உண்மையில் மூச்சை அடக்கிப் பாடினாரா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

What to watch on Theatre: கிங்ஸ்டன், Gentle woman, நிறம் மாறும் உலகில் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

கிங்ஸ்டன் (தமிழ்) Kingstonஅறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'. இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்... மேலும் பார்க்க

Mookuthi Amman 2: `பட்ஜெட்னு மூணு விரலை காமிச்சாரு; Pan India-ல ஒரு அம்மன் படம்' - ஐசரி கணேஷ்

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் `மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் உருவாகவிருக்கிறது.மூக்குத்தி அம்மனாக நயன்தாரா முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் நடிக்கவிருக்கிறார். இவரை தாண்டி மீனா, ரெஜி... மேலும் பார்க்க

`மொஸார்ட், பீத்தோவன்... இப்போ இளையராஜா; இது அப்பாவின் நீண்டநாள் ஆசை' - கார்த்திக் ராஜா நெகிழ்ச்சி

லண்டனில் அப்பல்லோ அரங்கில் வருகின்ற மார்ச் 8-ம் தேதி அன்று புதிய சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்யவுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.இந்நிலையில் இன்று காலை லண்டனுக்குச் செல்லும் இளையராஜாவை வாழ்த்த... மேலும் பார்க்க