செய்திகள் :

Murmu: பழங்குடிகள் சந்திப்பு டு பட்டமளிப்பு விழா - 4 நாள் பயணமாக தமிழகம் வரும் குடியரசு தலைவர்

post image

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வருகைத் தர இருக்கிறார். நாளை மறுநாள் 27 -ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமான நிலையத்தை வந்தடைய இருக்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டியில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவன் செல்கிறார். அங்கு தங்கும் குடியரசு தலைவர், 28 -ம் தேதி குன்னூர், வெலிங்டன் முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்.

பாதுகாப்பு முன்னேற்பாடுகள்

சாலை மார்க்கமாகவே மீண்டும் ராஜ்பவன் திரும்பும் அவர், 29 தேதி ராஜ்பவனில் தங்கி பழங்குடி மக்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாட இருக்கிறார். 30 - ம் தேதி ஊட்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சூலூர் விமான நிலையம் செல்லும் அவர், அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார். திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள 9 - வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இருக்கிறார். அங்கிருந்து மீண்டும் டெல்லி திரும்புகிறார் ‌.

குடியரசு தலைவர் வருகை குறித்து பேசிய நீலகிரி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், " தமிழகத்தில் நடைபெற இருக்கும் இரண்டு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க இருக்கிறார். வெலிங்டனில் ராணுவம் தரப்பில் வரவேற்பு ஒத்திகை நடைபெற்று வருகின்றன. ஹெலிபேட் முதல் ராஜ்பவன் வரை முழுமையாக காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

முன்னேற்பாடுகள்

ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய இடங்களில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது. காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டால் மாற்று இடத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்கவும் முன்னேற்பாடுகள் தயாராக உள்ளன" என்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

ராஜீவ் காந்தி `ஸ்கெட்ச்’ - செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுக-வில் இணைந்த கோவை நாதக-வினர்!

நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் 24-ம் தேதி தி.மு.க-வில் இணைந்தனர். அவர்கள் நா.த.க-விலிருந்து வெளியேறி, தி... மேலும் பார்க்க

Wayanad: வயநாட்டில் டெபாசிட் இழந்த பா.ஜ.க, தோற்றாலும் ஆறுதலில் கம்யூனிஸ்டுகள்! பின்னணி என்ன?

வயநாடு இடைத்தேர்தலில் சுமார் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இமாலய வெற்றியை காங்கிரஸ் கூட்டணி வசமாகியிருக்கிறார் பிரியங்கா காந்தி. இவரை எதிர்த்து போட்டியிட்ட கேரள மாநிலத்தை ஆளும் கம்யூனிஸ்டு கட்சி வேட... மேலும் பார்க்க

கூகுள் மேப் வழியில் பயணம்... உடைந்த பாலத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்த கார்.. 3 பேர் பலி!

உத்தரப்பிரதேசத்தில் நடந்த சோகம்..!பொதுவாக வெளியிடங்களுக்கு வாகனங்களில் செல்லும்போது ஜி.பி.எஸ்.வழிகாட்டுதலில் செல்வது வழக்கம். அவ்வாறு ஜி.பி.எஸ்.வழிகாட்டுதலில் செல்லும்போது சில நேரங்களில் தவறான வழியில்... மேலும் பார்க்க

விவசாய நிலங்களுக்கு மட்டுமல்ல, நீர்நிலைகளுக்கும் வேட்டு...

அனைவருக்கும் பசுமை வணக்கம்!கடைசியில் அந்தக் கொடுமையான சட்டத்தை அமல்படுத்தியேவிட்டது தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு.‘தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கு) சட்ட மசோதா - 2023, தமிழ்நா... மேலும் பார்க்க

Priyanka : முதல் களமே அமர்க்களம்; வயநாட்டை பிரியங்கா வசமாக்கியது எப்படி?

வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ராகுல் காந்தி, வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். ராகுலின் இந்த முடிவு கேரள காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரை சற... மேலும் பார்க்க

அடுத்தகட்டம் நோக்கி நகரும் ரஷ்யா - உக்ரைன் போர்... விளைவுகள் எப்படி இருக்கும்?

ஆயிரம் நாள்களைக் கடந்தும் முடிவடையாமல் சென்றுகொண்டிருக்கிறது ரஷ்யா- உக்ரைன் போர். முன்பை விட மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் இந்த போரில், ரஷ்யா முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை ... மேலும் பார்க்க