செய்திகள் :

Navarasa: 9 பிரபல பாடகர்கள் பங்கேற்கும் 'நவரசா'- லஷ்மன் ஸ்ருதியின் இசைக் கச்சேரி

post image
அக்டோபர் 19ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கத்தில் 'லஷ்மன் ஸ்ருதி' இசைக்குழு `நவரசா' என்கிற தலைப்பில் 9 பாடகர்கள் பங்கேற்கும் இசைக்கச்சேரி நடக்க இருக்கிறது.

இந்த இசை கச்சேரியில் பின்னணிப்பாடகி கலைமாமணி மாலதி லஷ்மண் பின்னணிப்பாடகர் முகேஷ், விஜய் டிவி சூப்பர் சிங்கர் சாம் விஷால், பரத், ஸ்ரீநிஷா, மானசி, பேபி அக்‌ஷரா லஷ்மி, ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் பின்னணிப் பாடகி ரீமா ஆகியோர் பங்கேற்றுப் பாடும் 'லஷ்மன் ஸ்ருதி' யின் பிரம்மாண்டமான மெல்லிசை நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை நடைபெற இருகிறது.

நவரசா

இசைக்கருவிகளின் முக்கியத்துவத்தையும் அருமை பெருமைகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் இந்நிகழ்வு நூறு சதவீதம் இசைக்கலைஞர்கள் இசைக்க மேலே குறிப்பிட்டுள்ள பாடகர், பாடகிகள் பாட மிக சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சி இசை ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும். நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை bookmyshow.com, paytm insider.in ஆகிய இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். டிக்கெட் மற்றும் விபரங்களுக்கு : +91 98842 19007 / + 91 91760 04547 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Krishnakumar Kunnath - KK (கிருஷ்ணகுமார் கண்ணதாசன்) பாடகர்

கிருஷ்ணகுமார் கண்ணதாசன் (KK)பிறப்பு: 1968, சென்னை, இந்தியாஇறப்பு: 31 மே 2022கோடைச் சொற்கள்: இந்திய இசை, பாடகர், இசையமைப்பாளர்மருத்துவம்: கிருஷ்ணகுமார் கண்ணதாசன் (KK) தமிழில் அதிகம் பரபரப்பாக பேசப்படும... மேலும் பார்க்க

One Direction குழுவின் பாடகர் Liam Payne (31) மரணம் - என்ன நடந்தது?

ஒன் டைரக்‌ஷன் என்ற பிரபல ஆங்கில பாடல் குழுவின் முன்னாள் உறுப்பினரான லியம் பேய்னே அர்ஜெண்டினாவில் பியூனஸ் அயர்ஸ் என்ற ஹோட்டலில் தங்கியிருந்தபோது பால்கனியில் இருந்து விழுந்து மரணமடைந்துள்ளார்.31 வயதான ப... மேலும் பார்க்க