செய்திகள் :

NEP: ”தேசிய கல்விக் கொள்கை அமலானால், 75 சதவீத மாணவர்கள் கல்வியை விட்டுவிடுவார்கள்”- முத்தரசன்

post image

தஞ்சாவூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 27வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நாடு முழுவதும் விவசாயிகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் போது, வேளாண் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயச் சட்டம் நிறைவேற்றப்படும். விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்ற வாக்குறுதியை, மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.

முத்தரசன்

இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரூ.1,555 கோடி பேரிடர் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பெஞ்சல் புயல், கேரளாவில் வயநாடு நிலச்சரிவு போன்றவற்றில் பாதிக்கப்பட்டு நிதியைக் கேட்ட போதும், ஒரு பைசா கூட தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் மத்திய நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. தங்களை அரசியல் ரீதியாக எதிர்க்கும் கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு நிதி கொடுக்க மாட்டோம் என மத்திய அரசு கூறுவது சர்வாதிகார செயலாகும்.

100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி மற்றும் பயனாளிகள் எண்ணிக்கையைக் குறைத்து விட்டது. நுாறு நாள் வேலைத் திட்டத்திற்காக, தமிழகத்திற்கு ரூ. 2208.74 கோடி நிதியை மூன்று மாதமாக வழங்காமல் உள்ளது. இப்படியாகக் கல்வி நிதி, பேரிடர் நிதி என எதையும் வழங்காமல் புறக்கணிப்பது நாட்டில் கலகத்தைத் தூண்டுவதாகும். மத்திய அரசு நிதியை, தமிழக அரசு இலவசங்கள் வழங்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் தகவல் பொய். மத்திய அரசைத் தமிழக முதல்வர் அரசியல் ரீதியாக எதிர்த்துப் போராடி வருகிறார். ஆனால், மத்திய அரசு அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாமல், மாநில அரசுக்குக் கொடுக்க வேண்டிய நிதியைக் குறைத்தால், மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்ற நிலையை உருவாக்கி வருகிறது.

முத்தரசன்
முத்தரசன்

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால், 75 சதவீத மாணவர்கள் கல்வியை விட்டுச் சென்று விடுவார்கள். மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்திற்கான ரூ.2,152 கோடி நிதியைத் தர மாட்டோம் என மத்திய கல்வி அமைச்சர் கூறி இருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம். இதை எதிர்த்துத்தான் போராடுகிறோம். தமிழகத்தில், மத்திய அரசு நடத்தும் 49 நவோதயா பள்ளிகளில் ஒன்றில்கூட தமிழ் ஆசிரியர்கள் இல்லை. மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம் என பா.ஜ.க கூறும் நிலையில், மாணவர்கள் கேட்கும் மொழிக்கு எல்லாம் ஆசிரியர் நியமித்துச் சொல்லிக் கொடுப்பது சாத்தியம் இல்லை. இது இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் செய்கிற போக்கு" என்றார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

20 ஆண்டுகள்... ரூ.47 லட்சம் சொத்து வரி பாக்கி; நூதன முறையில் வரி வசூல் செய்த தஞ்சாவூர் மாநகராட்சி!

தஞ்சாவூர் சீனிவாசன் பிள்ளை சாலையில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 80 கடைகள் உள்ளன. வணிக வளாக நிர்வாகத்தினர் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் இருந்துள்ளன... மேலும் பார்க்க

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம்; ஒருவர் கைது... சிறையிலடைத்த போலீஸ்!

கடந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான வெள்ள பாதிப்புகளுக்குள்ளாகின. இதில், விழுப்புரம் மாவட்டத்தின் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில்... மேலும் பார்க்க

`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின் சாடல்

கும்பமேளாவை ஒட்டி டெல்லியில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் 18 பேர் மரணமடைந்த நிகழ்வு, நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரயில் நிலையத்தில் முன்பதிவில்லாமல் கூட்டம் கூட்டமாக... மேலும் பார்க்க

`மொழி' குறித்த ஜெக்தீப் தன்கரின் பேச்சு: `பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது' - கனிமொழி ட்வீட்

தமிழ்நாட்டின் பள்ளிகளில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்விக்காக வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது ... மேலும் பார்க்க

USAID அமைப்போடு நீண்ட கால தொடர்பு; பொய் சொல்கிறதா பாஜக? - Fact Checkers சொல்வதென்ன?

அமெரிக்காவின் USAID அமைப்பு 21 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவின் தேர்தல் விழிப்புணர்வு பணிகளுக்கு ஒதுக்கியதன் மூலம், இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தலையிடும் விதமாக செயல்பட்டதாக ட்ரம்ப் அ... மேலும் பார்க்க

NEP: `குறுகிய கண்ணோட்டம் வேண்டாம்; அரசியல் காரணங்களுக்காக..! - ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில், தமிழ்நாடு அரசு இதை ஏற்றுக்கொள்ளாவிடில் தமிழ்நாட்டுக்கு கல்விக்கான நிதி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை என்று, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான கடந்த வாரம் கூறியது ம... மேலும் பார்க்க