Ooty: முழுவதுமாக டீசல் இன்ஜினுக்கு மாறும் மலை ரயில்; சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் ரயில்வே நிர்வாகம்
பிரிட்டிஷ் ஆட்சியின்போது மேட்டுப்பாளையம் முதல் ஊட்டிக்கு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. அடர்ந்த வனத்திற்கு ஊடாகவும் ஆறுகளுக்குக் குறுக்கேயும் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
செங்குத்து மலைச்சரிவில் சுவிட்சர்லாந்து தொழில்நுட்பமான பல் சக்கர தண்டவாள அமைப்பில் நீலகிரி மலை ரயில் பாதை நிறுவப்பட்டுள்ளது. நூற்றாண்டுகளைக் கடந்து நீராவி மூலம் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த மலை ரயில் ஆரம்பத்தில் நிலக்கரி மூலமே இயக்கப்பட்டது.
நிலக்கரி தட்டுப்பாடு, மாசுபாடு குறைப்பு, தொழில்நுட்ப மாற்றம் காரணமாக ஃபர்னஸ் ஆயில் எனப்படும் தாவர எண்ணெய் மூலம் இயக்கப்பட்டது. அதிலும் காற்று மாசு என்பதால் டீசல் மூலம் இயங்கும் வகையில் அனைத்து ரயில் இன்ஜின்களும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
திருச்சி பொன்மலை பணிமனையில் வடிவமைக்கப்பட்ட '37397 ' எண் கொண்ட 'பெட்டா குயின்' ரயில் இன்ஜின் ஃபர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடைசியாக அந்த இன்ஜினையும் டீசலுக்கு மாற்றி தீவிர சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகிறது மலை ரயில் நிர்வாகம்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...