செய்திகள் :

PBKS Vs RR: "எல்லா நாள்களும் ஒரேமாதிரியாக இருக்கப் போவதில்லை" - ஆட்டநாயகன் ஆர்ச்சர்

post image

ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற ஐபிஎல் 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, ஜெய்ஸ்வால், ரியான் பராக், கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் 205 ரன்கள் குவித்தது.

ஜெய்ஸ்வால் - சஞ்சு சாம்சன்
ஜெய்ஸ்வால் - சஞ்சு சாம்சன்

அதையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் அணி, ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டைப் பறிகொடுத்தது. நடுவில், நேஹல் வதேரா - மேக்ஸ்வெல் கூட்டணி சற்று நம்பிக்கையளித்தாலும் ராஜஸ்தானின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டும் அடித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருதை, ராஜஸ்தான் தரப்பில் அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆர்ச்சர் வென்றார்.

ஆர்ச்சர் - ஜெய்ஸ்வால்
ஆர்ச்சர் - ஜெய்ஸ்வால்

விருது பெற்ற பிறகு பேசிய ஆர்ச்சர், ``வெற்றிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சி. இது போன்ற நாள்களில், நல்ல விஷயங்களை அனுபவிக்கிறோம், தவறுகளை முன்னேற்றத்துக்காக ஏற்றுக் கொள்கிறோம். எல்லா நாள்களும் ஒரேமாதிரியாக இருக்கப் போவதில்லை. நம்மைப் போலவே எல்லோருமே கடினமாகப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், சில சூழ்நிலைகளில் நாம் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறோம்" என்று கூறினார்.

Digvesh Rathi: 2 முறை அபராதம் விதித்தும் மாறாத லக்னோ இளம் வீரர்; மீண்டும் அபராதம் விதிக்கப்படுமா?

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 8) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி தனது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்தது.முதலில் பேட்டிங் செய்த ல... மேலும் பார்க்க

CSK : `கான்வேயை வெளியே அனுப்பியது ஏன்?' - தோல்விக்குக் காரணம் சொல்லும் ருத்துராஜ்

'சென்னை தோல்வி!'சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி முலான்பூரில் நடந்திருந்தது. கடைசி வரை பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டியை சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற... மேலும் பார்க்க

PBKS vs CSK : சென்னையை வீழ்த்திய அந்த 24 பந்துகள்; ஸ்ரேயஸ் ஐயரின் மாஸ்டர் பிளான்

'சென்னை தோல்வி!'பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சண்டிகரின் முலான்பூரில் நடந்து முடிந்திருக்கிறது. கடைசி வரை போராடிய சென்னை அணி நெருங்கி வந்து 18 ரன்கள் வித்தியாசத... மேலும் பார்க்க

KKR Vs LSG: அதிரடி காட்டிய பூரன், மார்ஷ்; இறுதிவரை போராடிய ரிங்கு சிங் - 472 ரன்களை தொட்ட போட்டி!

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்... மேலும் பார்க்க

Shreyas Iyer: `மனமுடைந்து அழுதேன், என் மீதே கோபம்...' - மனம் திறந்த ஷ்ரேயஸ்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது எமோஷனலாக இருந்தது குறித்து மனம் திறந்துள்ளார். இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரை அபாரமாக விளையாடி கைப்பற்றியது. அணியின் வெற்... மேலும் பார்க்க

PBKS vs CSK : தோல்வியைத் தவிர்க்க இந்த 3 விஷயத்தை செய்யுங்க CSK - Analysis

'சென்னை செய்ய வேண்டிய 3 விஷயஙகள்!'சென்னை அணி இன்று பஞ்சாபை எதிர்கொள்கிறது. ஹாட்ரிக் தோல்விக்குப் பிறகான போட்டி இது. இந்தப் போட்டியிலாவது வென்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத... மேலும் பார்க்க