சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் வெளியானது! விலை எவ்வளவு?
Trump Tariff : `சீன பொருட்களுக்கு 104% வரி' - அதிரடியாக அறிவித்த அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 26 சதவீத வரி விதித்துள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக பட்சமாக 50 சதவீதம் அளவுக்கு வரி விதித்து இருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய சீனா, "சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருட்களின் மீது 34 சதவிகித வரி விதிக்கப்படும். இது வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது" என்று அறிவித்தது. இது சீனா - அமெரிக்கா இடையேயான வர்த்தக போரை கிளப்பியிருக்கிறது.

"இந்த வரியை நீக்காவிட்டால் சீன இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதலாக 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும்" என ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், சீனப் பொருட்கள் அனைத்திற்கும் கூடுதலாக 50 சதவிகித வரி விதிக்கப்படும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் சீன பொருட்களுக்கான அடிப்படை வரியாக 10%, ஏற்கனவே அமலில் உள்ள 10%, தற்போது புதிதாக ட்ரம்ப் விதித்த வரி 34% மற்றும் தற்போது அமெரிக்க அரசு உயர்த்தியுள்ள 50% என சீனப் பொருட்கள் மீதான வரி அமெரிக்காவில் மொத்தம் 104 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது உலக அரசியலில் பெரும் விவாதப்பொருளாகியிருக்கிறது.