செய்திகள் :

Planet Y: பூமிக்கும் புதனுக்கும் இடைப்பட்ட வெளியில் புது கிரகமா?- வானியலாளர்கள் வெளியிட்ட தகவல்!

post image

சூரிய மண்டலத்தின் தொலைதூரப் பகுதியில் இதுவரை கண்டறியப்படாத ஒரு புதிய கிரகம் இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் புதிய ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த மர்மமான கிரகத்திற்கு 'பிளானட் Y' (Planet Y) என்று பெயரிடப்பட்டுள்ளது.

நெப்டியூன் கிரகத்திற்கு அப்பால் உள்ள பகுதியில் சுமார் 50 விண்பொருட்களின் சுற்றுப்பாதையில் ஒரு விசித்திரமான சாய்வு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த விண்பொருட்கள் சுமார் 15 டிகிரி சாய்வில் காணப்படுவது, அங்கு ஒரு மறைமுக கிரகத்தின் ஈர்ப்பு விசை காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

space

இந்த ஆய்வை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் அமீர் சிராஜ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர். பூமியை விட சிறியதாகவும், புதன் கிரகத்தை விட பெரியதாகவும் இந்த கிரகம் சூரிய மண்டலத்தின் வெளிப்புறத்தில் சுற்றிக்கொண்டிருக்கலாம் என்று கணிக்கின்றனர்.

பிளானட் நைன்' (Planet Nine) என்ற ஒரு கிரகம் இதேபோன்ற கோட்பாட்டின் அடிப்படையில் முன்மொழியப்பட்டது.

ஆனால், பிளானட் Y என்பது அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. பிளானட் நைன் பூமியைப் போல 5 முதல் 10 மடங்கு பெரியதாகவும், மிகத் தொலைவிலும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆனால் பிளானட் Y புதன் மற்றும் பூமிக்கு இடைப்பட்ட அளவில் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கிரகங்களும் சூரிய மண்டலத்தில் ஒரே நேரத்தில் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கண்டுபிடிப்புக்கான சாத்தியக்கூறுகள் வலுவாக இருந்தாலும் 'பிளானட் Y' இருப்பு இன்னும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. இதனை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

'இரும்பை உருக்கும் மந்திரக் கல்' - வைரலாகும் போலி வீடியோ - பின்னிருக்கும் அறிவியல் உண்மை என்ன?

ஆப்கானிஸ்தானில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் அரிய கருப்பு நிறக் கல் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த கல் கையில் தொடும்போது சாதாரணமாக குளுமையாக இருந்தாலும் அதில் இரும்பு, எஃகு பொருட்களை... மேலும் பார்க்க

"5 லிட்டர் தண்ணீரில் 6 மாதம் அடுப்பு எரியுமா?" - Prof T.V.Venkateswaran Interview

தண்ணீரை மூலப்பொருளாகக் கொண்டு எரியும் அடுப்பை திருப்பூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் கண்டு பிடித்துள்ளதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. தண்ணீரை மூலப்பொருளாகக் கொண்டு அடுப்பு எரிவதன் பின்னணியில் இருக... மேலும் பார்க்க

``உலகின் சிறந்த விஞ்ஞானிகள்'' - ஸ்டான்போர்ட் பல்கலை., பட்டியலில் ராமநாதபுரம் உதவிப் பேராசிரியர்!

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலை மற்றும் எல்ஸ்வேர் நிறுவனம் இணைந்து உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளின் பட்டியலைத் தேர்வு செய்து வெளியிட்டுள்ளது.இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட இந்த தரவரிசைப் பட்டிய... மேலும் பார்க்க

மனிதனால் 150 வயதுக்கு மேல் வாழ முடியுமா? - ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

மனிதர்களின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகள் வரை நீட்டிப்பது குறித்து ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர், சமீபத்தில் பேசியது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.இந்த உரையாடலில் உயிரி தொழில்நு... மேலும் பார்க்க

தினமும் 'ஒரு பீர்' அளவிலான ஆல்கஹாலை உட்கொள்ளும் சிம்பன்சிகள் - ஆய்வில் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்!

காடுகளில் வாழும் சிம்பன்சிகள், நன்கு பழுத்த பழங்களை உண்பதன் மூலம் தினமும் ஒரு பீர் பாட்டில் அளவுக்கு சமமான ஆல்கஹாலை உட்கொள்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு ஆல்கஹால் மீதுள்ள நாட்டம் எப்ப... மேலும் பார்க்க

Sleep: அலாரம் அடிப்பதற்கு முன்பே கண் விழித்துவிடுகிறீர்களா? அதற்கு அறிவியல் காரணம் இதுதான்!

காலையில் அலாரம் அடிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பே கண் விழித்து அலாரமை ஆஃப் செய்திருப்போம். இந்த அனுபவம், நம் வாழ்வில் பலமுறை நடந்திருக்கும். இது ஏதோ தற்செயலான நிகழ்வு என்றோ, அல்லது நமக்கு ஏதோ சூ... மேலும் பார்க்க