செய்திகள் :

Prabhas: 'இனிமே நாம தான்!' - அடுத்த 3 படங்களுக்கும் பிரபாஸ்தான் ஹீரோ; ஹொம்பாலே நிறுவனம் அறிவிப்பு

post image

இந்தியளவில் ஹிட்டான படங்களின் வரிசையில் கே.ஜி.எஃப் 1-க்கு முக்கிய இடமுண்டு. பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான கே.ஜி.எஃப் பாகம் 1, பாகம் 2, ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா என மாபெரும் வெற்றிப் படங்களை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

அதைத் தொடர்ந்து, தெலுங்கின் பிரபல நடிகர் பிரபாஸ்ஸை வைத்து, இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கிய சலார் படத்தைத் தயாரித்தது. இந்தப் படமும் ரூ. 700 கோடிக்கும் மேல் வசூலித்து வணிக வெற்றியைத் தேடித் தந்தது. இந்நிலையில், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சலார் 2 உள்ளிட்ட அடுத்த மூன்று படங்களிலும் பிரபாஸ் நடிக்கவிருப்பதாக ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மேட் இன் இந்தியா பயணம் கடைசிவரை தொடரும்! ரிபெல் ஸ்டார் பிரபாஸ்ஸுடன் 2026 முதல் 2028 வரை 3 படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதை மிகவும் பெருமையுடன் அறிவிக்கிறோம். இந்திய சினிமாவின் சாரம்சத்தை உலகத்துக்குக் கொண்டு செல்வதே எங்களின் நோக்கம். மறக்க முடியாத சினிமாட்டிக் அனுபவத்தைத் தருவோம் என்ற எங்களது வாக்குறுதி பிரகடனமே இது. அதற்கான மேடை தயாராக இருக்கிறது. எங்களின் இலக்குக்கு எல்லையே இல்லை. சலார்-2விலிருந்து இந்த பயணத்தைத் தொடங்குகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

பாலய்யா வஸ்தாவய்யா 9: 'கன்டி சுப்புதோ சம்பேஸ்துரா..!' - மொரீசியஸில் பாலய்யா கொடுத்த நிஜ 'பன்ச்'

தன்னை கேவலமாகத் திட்டும் பாலய்யாவை மட்டும் ஜெகன்மோகன் ரெட்டி கடிந்து கொண்டதே இல்லை..? காரணம் என்ன தெரியுமா..?ஆம்... நீங்கள் யூகித்தது சரிதான். சினிமாவில் ஜெகனுக்குப் பிடித்த ஹீரோ பாலய்யா தான். பிடித்த... மேலும் பார்க்க

பாலய்யா வஸ்தாவய்யா- 8: `இரவு பார்ட்டியில் நடந்த ஷாக்' - சட்டமன்றத்தில் ரணகள அதகளம்

சென்ற எபிசோடில் பாலய்யாவால் மிரண்டு போன இயக்குநர் பிரியதர்ஷன் பற்றி சொல்வதாகச் சொல்லியிருந்தேன். 90களின் இறுதியில் நடந்த சம்பவம் அது.தன் இயக்கத்தில் ஹிட்டடித்த பாலிவுட் படமொன்றின் சில்வர் ஜூப்லி வெற்ற... மேலும் பார்க்க

பாலய்யா வஸ்தாவய்யா 7: `பருப்பே துணை' - தமிழ் IAS சென்டிமென்ட் - பாலய்யா தோண்டிய குழிகள்

பாலய்யா தொடருக்கு பல்வேறு திசைகளிலிருந்தும் பாராட்டுகளும் விமர்சனங்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றன. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி..!''பாலய்யா பற்றி பாசிட்டிவா சொல்ல நிறைய உண்டே..? அதை விட்டுறாதீங்க யப்போ!" எ... மேலும் பார்க்க

Lucky Baskhar Review: அட்டகாச துல்கர், மீனாட்சி; நிதிக் குற்றப் பின்னணியில் ஒரு மிரட்டல் த்ரில்லர்!

1992-ம் ஆண்டு மும்பை மகதா வங்கியில் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜராகப் பணிபுரியும் பாஸ்கர் (துல்கர் சல்மான்), காலை நடைப்பயிற்சியில் இருக்கும்போது திடீரென சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார். அங்கிருந்... மேலும் பார்க்க

பாலய்யா வஸ்தாவய்யா 6: `ஜோதிடம், சகுனம், பரிகாரம்'- துப்பாக்கியால் தயாரிப்பாளரை சுட்டாரா பாலைய்யா?

பாலய்யா என்றதும் நம் மனதில் வருவது அவர் பேசும் பன்ச்களும், சுமோக்களை ஒற்றைக்கையால் டீல் செய்து பறக்க விடுவதும், ரயிலையே 'ஜெய் சென்னகேசவா' என்று சொல்லி தொடாமலே ரிவர்ஸில் திருப்பி அனுப்புவதும் தான்! இதை... மேலும் பார்க்க

பாலய்யா வஸ்தாவய்யா 5: `புலிப்பாண்டி பயங்கரமானவன் தான்! - சிரஞ்சீவியுடன் நடந்த மல்லுக்கட்டு

"அவ்வளவுதான் நம்மள முடிச்சுவிட்டீங்க போங்க!" என்று பாலய்யா ரசிகர்கள் சார்பாக ராயலசீமா ஏரியா கர்நூல் மாவட்டத்திலிருந்து கல்லூரி நண்பன் ராகவேந்திரா பசுப்புலேட்டி போனில் அழைத்தான்.''தொங்கன குடுக்கா... பா... மேலும் பார்க்க