இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி...
Preity Zinta: ``19 வயது வீரராக முதல் சந்திப்பு; இன்றுவரை ரசிகை..'' - சஹல் குறித்து ப்ரீத்தி ஜிந்தா
IPL, பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹலை முதன்முறையாக சந்தித்தது பற்றி மனம் நெகிழும் வகையில் பகிர்ந்துள்ளார்.
எப்போதுமே சஹலின் ரசிகையாக இருந்ததாகவும், அவரது 19 வயதிலிருந்து அவரது முழு பயணத்தையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 15ம் தேதி நடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான போட்டியில் சஹல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற வழிவகுத்தார்.

அந்த குறைந்த ஸ்கோர் போட்டியில் சஹலின் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்தது.
இந்த பதிவில் ஆரம்ப காலத்தில் டீனேஜராக சஹல் அங்கம் வகித்த பஞ்சாப் அணியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் இந்த சீசனில் சஹலுடன் இருக்கும் புகைப்படத்தையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் சஹல் ஆட்டநாயகன் விருது வாங்கியபோது அருக்கு அருகில் இருந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
"எங்கள் அணியில் சேர்க்க விரும்பினோம்" - Preity Zinta
"எப்படி தொடங்கியது vs எப்படி சென்றுகொண்டிருக்கிறது" என கேப்ஷனில் எழுதியிருந்தார்.
மேலும் ப்ரீத்தி, "நான் யுசியை 2009 சண்டிகரில் நடந்த கிங்ஸ் கப் போட்டியில் சந்தித்தேன். அப்போது கிரிக்கெட் எனக்குப் புதிது, சஹல் ஒரு இளம் 19 வயதுக்குள்ளான வீரர்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் பெரிதாக வளருவதையும், கிரிக்கெட் உலகின் முக்கிய வீரராக மாறுவதையும் பார்த்தேன். அவரது போட்டிப்போடும் சுபாவத்தை நான் விரும்பினேன். எப்படியாவது அவரை எங்கள் அணியில் சேர்க்க விரும்பினோம். ஆனால் இந்த சீசன் வரை அது நடக்காமலிருந்தது.
நான் ஏன் இத்தனை ஆண்டுகள் யுசியின் ரசிகையாக இருந்தேன் என்பதற்கு எங்கள் கடந்த போட்டி மிகப் பெரிய உதாரணம்.
நீங்கள் மீண்டும் உங்கள் இடத்திற்கு திரும்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் சஹல். எப்போதும் சிரித்து பிராசிப்பதைப் பார்க்க விரும்புகிறேன்." எனப் பகிர்ந்துள்ளார்.