செய்திகள் :

Priyanka: `நானும் நீயும் சேரும் போது தாறுமாறு தான்..!' - திருமணம் குறித்து அறிவித்த பிரியங்கா!

post image

தொகுப்பாளினியாக பரிச்சயமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `சூப்பர் சிங்கர் ஜூனியர் 10' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்று பிரியங்காவிற்கு வசி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

பிரியங்கா - வசி

டும் டும் டும்

பிரியங்கா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக அறிவித்திருக்கிறார். அதில், `லைஃப் அப்டேட்' என்கிற குறிப்புடன் `Going to be chasing sunsets with this one' எனப் பதிவிட்டு அவருடைய திருமண புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். நீண்ட நாள் நண்பரான வசியை தற்போது கரம் பிடித்திருக்கிறார் பிரியங்கா. 

வருகிற ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி `பிக்பாஸ் சீசன் 5'ல் போட்டியாளர்களாக பங்கேற்றிருந்த அமீர், பாவ்னி இருவருக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது. பிக்பாஸ் வீட்டிலேயே அமீர் பாவ்னியை காதலிப்பதை வெளிப்படுத்தியிருந்தார். வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு இருவரும் காதலிப்பதை அவர்களுடைய ரசிகர்களுக்கு அறிவித்திருந்தனர். அதே சீனனில் அவர்களுடன் போட்டியாளராக பங்கேற்றிருந்தார் பிரியங்கா. இந்நிலையில், பிரியங்காவின் திருமணத்திற்கு அமீர் - பாவ்னி இருவரும் ஜோடியாக சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். அவர்களுடன் நிரூப்பும் கலந்து கொண்டிருக்கிறார்.

பிரியங்கா - வசி

பிரியங்காவின் நெருங்கிய நண்பர்கள் பலரும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கின்றனர். இவர்களுடைய திருமணம் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. 

வாழ்த்துகள் பிரியங்கா - வசி! 

Amir-Pavani: 'நீயும் நானும் சேர்ந்தே செல்லும் தூரமே...' அமீர்- பவானி திருமணம்; குவியும் வாழ்த்துகள்

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் காதலிக்கத் தொடங்கிய அமீர்- பாவனி ஜோடிக்கு இன்று (ஏப்ரல் 20) திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சின்னத்தம்பி' சீரியலில் கதாநாயகியாக ... மேலும் பார்க்க

Priyanka: இலங்கை அரசியல் தலைவரின் குடும்பத்தில் பிரியங்கா; கணவர் வசியின் அரசியல் பின்னணி என்ன?

விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கும் வசி என்பவருக்கும் இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் நடந்ததல்லவா?பிரியங்காவின் கழுத்தில் தாலி கட்டிய அவரது கணவர் வசி குறித்து சமூக ஊடகங்களில் பலரும் ... மேலும் பார்க்க

Priyanka: 'உன்னை காதலிக்கும் நபரை மட்டும் கண்டுப்பிடிக்காமல் உன்னை..' - ப்ரியங்காவை வாழ்த்திய நிரூப்

பிரபல தொகுப்பாளரானப் ப்ரியங்காவிற்கு நேற்று( ஏப்ரல் 16) திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிக் பாஸ் பிரபலமும், ப்ரியங்காவின் நண்... மேலும் பார்க்க

Priyanka: 'உன்னோடு வாழ்வது ஆனந்தமே!' - தொகுப்பாளர் ப்ரியங்காவின் திருமண க்ளிக்ஸ்|Photo Album

Priyanka Deshpande MarriagePriyanka Deshpande MarriagePriyanka Deshpande MarriagePriyanka Deshpande MarriagePriyanka Deshpande MarriagePriyanka Deshpande MarriagePriyanka Deshpande MarriagePriyanka De... மேலும் பார்க்க

மிரட்டிய கோவிட்,'கம்பேக்'கை தடுத்த ஆபரேஷன்- 'அள்ளித்தந்த வானம்'கல்யாணி|இப்ப என்ன பண்றாங்க | பகுதி 5

ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்ட வங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா சூழ்நிலையா தெரியாது. இப்போது மேக் அப் ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். ‘இ... மேலும் பார்க்க