கபூர் குடும்பத்தினருடன் மோடி; பாதிக்கப்பட்டவர்களுடன் ராகுல்! - விமரிசிக்கும் காங...
Pushpa 2: பெண் உயிரிழந்த விவகாரம்; எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தை நாடிய அல்லு அர்ஜூன்
Pushpa 2: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'புஷ்பா 2' திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. அப்போது, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டது. அந்தத் திரையிடலுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் சென்றிருந்தார். அப்போது, ரசிகர்களின் திடீர் கூட்டம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை தடியடி நடத்தியது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 39 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரின் மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்றுவருகிறார்.
நடிகர் அல்லு அர்ஜுன் மனுத்தாக்கல்
அதைத் தொடர்ந்து, ஹைதராபாத் காவல்துறை நடிகர் அல்லு அர்ஜுன், அவரின் பாதுகாப்புக் குழுவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் டிசம்பர் 6 அன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திப்பதாகவும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவியும், சிகிச்சையிலிருக்கும் சிறுவனின் மருத்துவச் செலவையும் ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, நேற்று உயிரிழந்த பெண் ரசிகை தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த வழக்கை நீதிமன்றம் விரைவில் விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.