தென் கொரிய அதிபருக்கு எதிராக மீண்டும் பதவி நீக்கத் தீா்மானம்
``வீடு, கார் வாங்கிட்டு வருவோம்'' - `லக்கி பாஸ்கர்' படம் பார்த்துவிட்டு தப்பியோடிய 4 மாணவர்கள்!
‛லக்கி பாஸ்கர்' திரைப்படத்தை பார்த்த 9 -ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி, ராம்கி நடிப்பில், ஜி.வி பிரகாஷ்குமார் இசையில் வெளியான திரைப்படம் 'லக்கி பாஸ்கர்'. தீபாவளி பண்டிகையின்போது வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ஓடிடி-யிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு 4 மாணவர்கள் மாயமான செய்தி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மகாராணிப்பேட்டையில் பிரபல தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அங்கு 9-ம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவர்கள் சமீபத்தில் லக்கி பாஸ்கர் படத்தை பார்த்திருக்கிறார்கள். அந்தத் திரைப்படத்தில் கதாநாயகன் பணம், வீடு ஆகியவற்றை மிக எளிதில் சம்பாதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அந்த காட்சிகளைப் பார்த்த மாணவர்கள் நடிகர் துல்கர் சல்மானை போல் பணம் சம்பாதித்து வீடு, கார் வாங்கிவிட்டு இங்கு வருவோம் என்று நண்பர்களிடம் கூறிவிட்டு விடுதியில் இருந்து தப்பித்து சென்றிருக்கின்றனர். மாணவர்கள் குறித்து ஹாஸ்டல் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.
லக்கி பாஸ்கர் போல் பணம் சம்பாதிக்க ஹாஸ்டலில் இருந்து தப்பி ஓடிய மாணவர்கள் நான்கு பேர் கிரண், கார்த்திக், சரண் தேஜ், ரகு ஆகியோர் என்று தெரிய வந்துள்ளது. தற்போது அந்த 4 மாணவர்களையும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.