மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்!
Rafael Nadal: "டென்னிஸ் இல்லாமல் இருப்பது கடினம்தான், ஆனால்..!" - கண்ணீர் மல்க விடைபெற்ற நடால்
டேவிஸ் கோப்பை தொடரின் காலிறுதி சுற்றில் ஏற்பட்ட தோல்வியுடன் ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் ஓய்வு பெற்றார்.
ஓய்வு குறித்து பேசிய நடால், " அனைவருக்கும் குட்-பை சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அனைத்து சூழல்களிலும் எனக்கு ஆதரவாக இருந்த குடும்பத்திற்கு நன்றி. வாழ்வில் நடக்கவே இயலாத விஷயங்களில் கூட எனது குடும்பத்தினர் எனக்கு நம்பிக்கை கொடுத்து ஆதரவாக இருந்தனர்.
அதேபோல் வெற்றியால் உச்சத்திற்கு சென்ற போதும், அவர்களால்தான் நான் நிதானமாகவும், அமைதியாகவும் இருந்திருக்கிறேன். எதிர்காலத்தில் என்ன நடந்தாலும், அதனை எளிமையாக கையாள முடியும் என்று நம்புகிறேன். அதற்காக பயிற்சிகளை செய்து வருகிறேன்.
டென்னிஸ் இல்லாமல் இருப்பது கடினம்தான். ஆனால் இதற்கு மேல் டென்னிஸ் விளையாட முடியாது என்று என் உடல் சொல்லிவிட்டது. அதனை ஏற்றுக் கொள்ளவேண்டும். நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். எனது பொழுதுபோக்கையே தொழிலாக மாற்ற முடிந்தது.
கிராண்ட்ஸ்லாம் கோப்பைகள், வெற்றிக் கணக்குகள் உள்ளிட்டவை எல்லாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் ரசிகர்களின் மனதில் ஒரு சிறிய கிராமமான மலோர்காவில் பிறந்த வளர்ந்த சிறந்த மனிதனாகவே நினைவில் இருக்க விரும்புகிறேன்" என்று கண்ணீர் மல்க நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...