பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?
Rain Alert: `புதிதாக உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி..!’ - பாலச்சந்திரன் சொல்வதென்ன?
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாலச்சந்திரன், " தற்போது உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலு குறையும். இதனைத்தொடர்ந்து வரும் 15-ம் தேதி அந்தமான் பகுதியில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. மழையைப் பொறுத்தவரை இன்று தென் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதேபோன்று இன்று சென்னை, செங்கல்பட்டு மற்றும் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள் உள்பட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளையும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. வடகிழக்கு பருவமழை இயல்பை விட 16% அதிகம். வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1 முதல் இன்று வரை 47 செ.மீ. பதிவாகி இருக்கிறது. காற்றழுத்த தாழ்வு பகுதியின் இயல்பு காரணமாக மழை விட்டு விட்டு பெய்கிறது.
காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால் பனிமூட்டம் போல் காணப்படுகிறது" என்று கூறியிருக்கிறார். மேலும் ஃபெஞ்சல் புயல் குறித்து பேசிய அவர், " ஃபெஞ்சல் புயல் திசையை சரியாக தான் கணித்தோம். ஆனால் திறனில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. உலகம் முழுக்கவே வானிலை கணிப்புகளில் தவறுகள் ஏற்படத்தான் செய்கின்றன.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அட்லாண்டிக் கடல் பகுதியில் புயல் கரையை கடந்த போது கணிப்புகள் தவறி இருந்தது. காலநிலை மாற்றம் காரணமாக வானிலை நிலவரங்களை துல்லியமாக கணிப்பதில் சிக்கல் உள்ளது. வானிலை கணிப்புகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம்" என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...