CBSE பள்ளிகளில் கற்பித்தல் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை..!
Rain Alert: மிதமானது முதல் கனமழை வரை.. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இந்திய வானிலை மைய கணிப்புப்படி,
இன்றும், நாளையும் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும்.
மேலும் இன்று மாலை 4 மணி வரை கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான முதல் கன மழை வரை பெய்யும்.
இன்று காலை 8.30 மணிக்கு முன்னால் கடந்த 24 மணிநேரத்தில், நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யத்தில் அதிக மழை பெய்துள்ளதாகவும், அதன் அளவு 188.5 மி.மீ என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
அதே கால அளவில் சென்னை, திருவாரூர் மாவட்டங்களில் லேசான மழையும், கோவையில் சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் லேசான மழையும், திருப்பூர், பெரம்பலூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழையும் திண்டுக்கல், மதுரை, தேனி, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட சில தென் மற்றும் கிழக்கு மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளதாகவும் இந்திய வானிலை மையம் கூறுகிறது.